இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மை THE DEITY OF JESUS CHRIST Jeffersonville, Indiana 49-12-25 வில்லியம் மரியன் பிரான்ஹாம் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மை THE DEITY OF JESUS CHRIST 49-12-25 1. சகோதரர் கிரஹாம், உமக்கு நன்றி, ஒவ்வொருவருக்கும் காலை வணக்கம். மற்றும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். மீண்டுமாக இன்று காலையில் இங்கு திரும்பி வந்து இந்த ஜெபகூடாரத்தில் இந்த அருமையான சிறிய கூட்டத்தாரோடு இருப்பதற்காக நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். 2. நானும் சகோ. கிரஹாமும் ஒரு காரியத்தைக் குறித்து பேசிக் கொண்டு இருந்தோம். அவர் அப்போது என்னிடத்தில், "சகோதரர் பில், இன்று காலையில் ஏதாவது உங்களுடைய இருதயத்தில் உள்ளதா?" என்றார். 3. அதற்கு நான், கிறிஸ்துவைத் தவிர வேறொன்றுமில்லை, என்றேன். ஆமென். அவ்வளவுதான். நாம் எப்போதும் அதை உடையவராய் இருக்கிறோம். அது மாத்திரம் அல்ல அவரைக் கொண்டிருப்பதுதான் நமக்குள் இருக்கும் பொதுவான காரியம். 4. நேற்று பிற்பகுதியில், டல்லஸிலிருந்து நான் காலதாமதமாக வந்தேன். அங்கே நாங்கள்..... அது மகத்தான கூட்டங்களில் ஒன்றாக இருந்தது. நாம் எந்தக் காரியத்திற்காக ஜெபித்துக் கொண்டிருந்தோமோ அது இப்பொழுது சம்பவிக்கத் தக்கதாய் இருக்கிறது. இந்த கூட்டம் ஏற்கனவே தேசம் முழுவதும் நடக்க இருக்கிற எழுப்புதலின் வரிசையில் சரியாய் இருந்து வருகிறது. நேற்று அல்ல கூட்டத்தின் கடைசி சில நாட்களில் எல்லா ஊழியக்காரர்களும் சிறியவர்களும், பேர்பெற்றவர்களும், பெரிய ஆராதனைகளைக் கொண்ட வர்களும் டல்லஸில் நடைபெற்ற இக்கூட்டதில் ஒன்று கூடினோம். அதில் பதினைந்து, பதினெட்டு ஊழியக்காரர்கள் மூவாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் வரை மக்கள் கூட்டத்தினருக்கு ஊழியம் செய்கிறவர்களாய் இருந்தார்கள், ஒருவேளை இருபது ஆயிரமும் கூட இருக்கலாம். உதாரணத்திற்குக் குறிப்பிட வேண்டுமென்றால், ரேமான்ட் டிரிச்சி, பாஸ்வர்த் மற்றும் ஓரல் ராபர்ட்ஸ், ஜாக்ஸன் இவர்கள் எல்லோரும் அங்கே இருந்தார்கள். 5. சகோ. ஜாக்சன், அன்றொரு இரவில் அவருடைய கூட்டத்தில் ஐநூறு பேர் ஒரே சமயத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள் அது அவ்வளவு அருமையாயிருக்கிறது. 6. மேலும் நாங்கள் எல்லோரும் ஒன்றுகூடி நேற்றைய தினத்தில் இல்லை, மற்றொரு நாளில் சந்தித்து, இந்த வருடத்தில் நாம் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து வேலை செய்யலாம் என ஒப்பந்தங்களை எடுத்தோம். நாங்கள் விசுவாசிக்கிறது என்னவென்றால், இந்த உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு தேவன் ஒரு கிரியையை நடப்பித்து ஒரு கலக்குதலை உண்டாக்க வேண்டும் என்பதே! அதற்காகவே தேவன் இங்கு இருக்கிறார். நண்பர்களே, நாம் எல்லோரும் ஒரு அற்புதமான காரியத்திற்குள் நுழைகிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். அடுத்த கோடைகாலத்தில், ஒவ்வொரு இரவிலும் இந்த ஊழியக்காரர்கள் எல்லாம், கர்த்தர் அனுமதிப்பாரானால், ஒவ்வொரு இரவும் குறைந்தபட்சம் பதினைந்து, பதினாறு அல்லது அதை காட்டிலும் கூடுதலான கூடாரங்களை போட்டு அதில் எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை மக்களைக் கொண்ட, அதே சமயத்தில் அமெரிக்க ஐக்கிய தேசம் முழுவதும் கூட்டங்கள் நடைபெற உள்ளது. 7. ஓ, நமக்கு இப்போது எழுப்புதல் இருந்தாக வேண்டும் அது இப்போது கட்டம் கட்டமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது; நூற்றுக்கணக்கானோர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டு தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அது ஏதோ இன்னும் கொஞ்ச நாட்களில் நடக்கும் என்று நாம் எதிர்பார்த்து இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஏற்கனவே இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அதை இப்பொழுதே தேவன் செய்து கொண்டிருக்கிறார்! 8. (சகோதரன் கிரஹாம் ஸ்நெல்லிங், சகோதரன் பிரான்ஹாமிடத்தில் மைக்ரோ போனைக் குறித்து கேட்கிறார்.) சரி ஜயா... இப்போது பரவாயில்லை சகோதரன். கிரஹாம். அதைக் குறித்துதான் நான் எப்பொழுதும் நினைப்பதுண்டு. நல்லது. சகோதரன். கிரஹாமும் நானும் ஒன்றாகச் சேர்ந்து அவ்வளவு அருமையாக வேலை செய்வதுண்டு; அவர் மிகவும் உயரமானவர், நானோ மிகவும் குள்ளமானவன். அதற்கு சகோதரன் ஸ்நெல்லிங், ''அவர் தாழ்வாக இருக்கும் பழங்களை பறிக்கிறார், நான் உயரே இருக்கும் பழங்களை பெற்றுக் கொள்கிறேன்," என்றார். (சகோதரன் பிரான்ஹாமும், சபையாரும் சிரிக்கிறார்கள்) சில சமயங்களில் சில பழங்கள் கீழே விழும்படிக்கு அதை உலுக்க அவரை நான் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. (ஒலி நாடாவில் வெற்றிடம்.) நன்றி சகோதரன். கிரஹாம். அந்த அக்னியை நான் இன்னும் இங்கு காணவில்லை. நாம் அதை பிரசங்க பீடத்தின் மேல் பெற்றிருக்க விரும்புகிறோம், அப்படி இல்லையா? ஆமென். ஏன் தெரியுமா, நீங்கள்.... 9. அன்றொரு இரவு நாம் கூடின இடத்தில், கண்ணுக்கெட்டின தூரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி, அவர்கள் எல்லோரும் கரங்களைத் தட்டி தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் உண்மையிலேயே ஒரு மகிமையான நேரத்தைக் கொண்டிருந்தோம். சரியாக அப்பொழுது பிரசங்க பீடத்தின் மேல் அந்த அக்னியைக் கொண்டிருந்தோம். 10. வருகின்ற கோடையின் எழுப்புதலை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த சந்தோஷமடைகிறோம். இப்பொழுது நான் எங்கே...... 11. இப்போது, நான் இங்கே இருக்கிற சபையோடும், சகோதரன். கிரஹாமோடும், மற்றும் உங்கள் எல்லோரோடும், அடுத்த எட்டு அல்லது பத்து நாட்கள் இருப்பேன். எனக்கு தெரிந்தமட்டில், என்னால் முடிந்தவரை ஒவ்வொரு ஆராதனையிலும் இங்கே இருப்பேன் என்று யூகிக்கிறேன். அதுவே என்னுடைய விருப்பம். 12. பின்பு நாங்கள் புறப்பட்டு டெக்ஸாஸ் யூஸ்டனில் உள்ள மிகப்பெரிய அரங்கத்திற்கு செல்கிறோம். அது ஒரு அருமையான கட்டிடம். அதில் பதினேழாயிரம் ஜனங்கள் உட்காரக் கூடிய இருக்கைகள் உள்ளது. நிச்சயமாகவே ஒரு மகத்தான நேரம் உண்டாயிருக்கும் என எதிர்பார்க்கிறோம். 13. நாங்கள் எல்லோருமாக சேர்ந்து கீழே சென்று ஜெப வரிசையைக் கொண்டிருக்க முயற்சித்தோம். ஆனால் எங்களால் அதை முடிக்க முடியவில்லை. ஒரு ஊழியக்காரர் ஒரு இடத்திலும், இன்னொருவர் ஜெபவரிசையிலுமாக சென்று ஜெபித்தார்கள். ஆனால், என்னே, அது அந்த வழியிலும் முடிக்க முடியவில்லை. சகோதரன் ஜேகர்ஸ் (Jaggers) மட்டும் தொடர்ந்து போய்க் கொண்டு இருக்க வேண்டியிருந்தது. 14. ஓ, இன்னொரு காரியத்தை நான் அறிவிக்க விரும்புகிறேன். நாம் கேல்கரியில் (Calgary) செய்தது போலவே, சகோதரன் ஜேகர்ஸ் அவர்களும் உறுதியான நிலையை எடுத்து திடமாய் நின்றார். மிஷனரி பாப்டிஸ்ட்களும், ஃப்ரிவில் பாப்டிஸ்டுகளும், (The free will Baptists) இன்னும் மற்றவர்களும் அவர் பட்சமாய் நின்றார்கள். (டெக்ஸாஸ் மாகாணம் முழுவதும் பாப்டிஸ்டுகளால் நிறைந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியும்.) ஆனால் அடிப்படை பாப்டிஸ்டுகளோ அவருக்கு விரோதமாக எழும்பினார்கள். ஓ, செய்தித்தாளில் அநேக கேள்விகளை அவரிடம் எழுப்பினார்கள். அது போன்றதை எல்லாம் அவருக்கு செய்தார்கள். வேதாகமத்திலிருந்து கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு அவர் பதிலும் அளித்திருந்தார். அவர்களுடைய கேள்விகளுக்கு அவர் ஆதாரத்தோடு நிரூபித்த பிறகு அதை அரசியலாக்கினார்கள். அவர்களால் அதை செய்தித்தாளில் போட மனதில்லாதிருந்தது. ஆகவே, சகோதரன் ஜேகர்ஸும் நாங்களும் ஒருகூட்டத்தை ஒழுங்குபடுத்தி ஊழியக்காரர் களுக்கு அழைப்பு கொடுத்தோம். அப்பொழுது அந்த பட்டணத்தில் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடிய எழுபத்தைந்து ஊழியக்காரர்கள் கூடிவந்தார்கள். நாங்கள் அந்த பதிலுடைய நகலை எடுத்து, இதுதான் பேச்சுரிமையா? இதுதான் பத்திரிக்கையின் உரிமையா? என்று கேள்வி கேட்டோம். அவ்விதமாக நாங்கள் செய்து, அதை வெளியிட்டோம். அதன்பிறகு, அடுத்த நாள் காலையில் அந்த பத்திரிகையானது பத்தாயிரம் சந்தாதாரர்களை இழந்தது. 15. அதன் பிறகு அவர்கள் வந்து முழங்காலில் நின்று கெஞ்சி, "நாங்கள் கண்டிப்பாக செய்தித்தாளில் வெளியிடுகிறோம்; இலவசமாய் செய்வோம்; நீங்கள் அதற்காக ஒரு பைசாவும் எங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை," என்றார்கள். 16. ஓ! சகோதரனே, ஓ! சபையே, கவனியுங்கள். ஒரு சமயம் நாம் இரயில் தண்டவாள பாதையின் அருகே ஜீவித்து வந்தோம். ஆனால் இனிமேல் அப்படி ஜீவிக்க வேண்டிய அவசியமில்லை. இப்பொழுது நாம் ''அல்லேலூயா தெருவில்" ஜீவிக்கிறோம். ஆம், ஐயா. நாம் இப்பொழுது லட்சகணக்கில் பெருகி இருக்கிறோம். ஒரு சமயம் நாம் நூற்றுக்கணக்கில் இருந்தோம். இப்பொழுதோ லட்சோபலட்ச எண்ணிக்கையில் பெருகியிருக்கிறோம். எல்லோரையும் ஒன்றுக்கூட்டினால், அமெரிக்க ஐக்கிய தேசத்தில் இருக்கிற எல்லோரைக் காட்டிலும், நாம் தான் இருக்கிறதிலேயே எண்ணிக்கையில் மிகுந்த வல்லமையுள்ள சபை. அது சரிதான், ஓ, உலகத்திலும் அப்படிதான் என்று நினைக்கிறேன். கடந்த வருடம் மட்டும் நாம் பதினைந்து லட்சம் மனமாற்றமடைந்தவர்களைப் பெற்றுக் கொண்டோம். அதை நினைத்துப் பாருங்கள்; கடந்த வருடம் பிரசுரிக்கப்பட்ட பொதுவான அறிக்கையின்படி முழு சுவிசேஷ கூட்டத்தாரில் மட்டும் பதினைந்து லட்சம் மக்கள் மனமாற்றம் அடைந்தவர்களாய் இருந்தர்கள். ஓ, நாம் எண்ணிக்கையில் வளர்ந்து வருகிறோம். 17. மேலும், இங்கே இருக்கிற இந்த சிறிய பத்திரிகைகள் எல்லாம் கத்தோலிக்க ஜனங்களைக் குறித்து ஒன்றும் பேசமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் மேல் இவர்களுக்கு பயம் இருக்கிறது. பாருங்கள், அப்படி செய்வதற்கு இவர்களுக்கு பயம். ஆனால் நாம் இப்போது எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டு வருகிறோம். நமக்கும் உரிமை இருக்கிறது. தேவனால் கொடுக்கப்பட்ட உரிமையைக் கொண்டு நாம் உரிமை கோரலாம். அது சரிதான். ஆகவே, இந்த வருடம் நாம் முன்னோக்கி சென்றவர்களாய், தேவனையே நம்முடைய சகாயராகவும், நம்முடைய கேடகமாகவும் கொண்டு எழுப்புதலைப் பெற்றுக் கொள்ள நம்மால் முடிந்த சிறந்த வகையில் முயற்சி செய்யலாம். 18. (யாரோ ஒருவர் சகோதரன் பிரான்ஹாமிடத்தில் பேசுகிறார்.) ஓ, இங்கே தானா? நான் எப்பொழுது நிறுத்த வேண்டும் என்று நீங்கள் எல்லோரும் எனக்கு சொல்ல வேண்டும். ஓ அங்கேயா? அங்கே தானா? நல்லது, இப்பொழுது என்னால் இந்த பக்கம் நடந்து சென்று, பின்னாகப் பார்க்க முடிகிறது. 19. நல்லது, இப்பொழுது எத்தனை பேர் கிறிஸ்துமஸ்காக சந்தோஷபடுகிறீர்கள்? அப்படி உணர்ந்தால், ''ஆமென்" என்று கூறுங்கள். (சபையார், ஆமென் என்கின்றனர்). ஓ மிகவும் மகத்தானது. கவனியுங்கள். இது ஒரு களிகூறுதலின் நேரமாய், நாம் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து கிறிஸ்துவை ஆராதிக்கக்கூடிய நேரமாக அமைந்துள்ளது. 20. நான்...... நான் பேசுவதற்கு ஒரு செய்தியும் கொண்டிருக்கவில்லை, ஒரு காரியமும் என்னிடத்தில் இல்லை. அந்த சகோதரன் இங்கே பேசிக் கொண்டிருக்கும்போது நான் வேதாகமத்தைத் திறந்தேன். வேதாகமத்தைத் திருப்பி, "கிறிஸ்துவின் பிறப்பு எங்கே இருக்கிறது?" என்று பார்த்தேன். ஏனெனில், கிட்டத்தட்ட எல்லோருமே இப்பொழுது அதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படியே கொஞ்ச நேரம் வாசித்துக் கொண்டிருந்தேன் பின்னர் ஒரு காரியத்தைக் கண்டு பிடித்தேன். கர்த்தருடைய ஆவியானவர் ஒரு காரியத்தை எடுத்துக் கொடுக்கும் வரைக்கும் அப்படியே தடுமாறிக் கொண்டிருந்தேன். 21. இப்பொழுது முதலாவது லூக்கா எழுதின புத்தகத்திலிருந்து துவங்கலாம். லூக்கா ஒன்றாம் அதிகாரம், அது கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து துவங்குகிறதாய் இருக்கிறது. எனவே இங்கிருந்து சிலவற்றை வாசித்து, நம்மால் முடிந்த மட்டும் வார்த்தையிலிருந்து சிலவற்றை போதிக்கலாம். தேவன் நமக்கு என்ன செய்யப் போகிறார் என்று நமக்குத் தெரியாது, ஆனால் மகத்தான ஆசீர்வாதத்தைக் கொடுப்பார் என்று நம்புகிறோம். 22. நான் உங்களுடைய வானொலி ஒளிபரப்பைக் கேட்டிருக்கிறேன், அது மிகவும் அருமையாக இருந்தது. அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருங்கள், தொடர்ந்து வார்த்தையை போதித்துக் கொண்டிருங்கள். 23. நான் சகோதரன் கிரஹாமிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதாவது, "கிறிஸ்துவர்களுக்கு, எப்பொழுதாவது ஒருவருக்கு ஒருவர் தேவை என்ற ஒரு நேரம் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்குமானால், அது இப்பொழுதுதான், சரியாக இப்பொழுதுதான் தேவை." ஆகவே, நீங்கள் என்ன செய்தாலும் அதை அப்படியே எல்லாவற்றையும் ஒரு பக்கத்தில் வைத்துவிடுங்கள். நான் விசுவாசிக்கிறது என்னவெனில், கர்த்தருடைய கிருபையால்..... இப்பொழுது அதைக்குறித்து தான், சில காரியங்களை, ஒரு சில நிமிடம் நான் உங்களோடு பேசப் போகிறேன். நமக்கு ஒருவருக்கு ஒருவர் அதிகம் தேவையுள்ளவர்களாய் இருக்கிறோம். 24. நாம் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் நாள் எவ்வளவு மகத்தானது என்றால்... நான் பேசுவதை கவனிக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்" என்கின்றனர்.) சரி. மனித வரலாறு முழுவதிலும் இதுவரை நடைப்பெற்ற நாடகங்களை எல்லாம் பார்க்கும்போது, நம் முன்னால் இருக்கின்ற இவைகளே மிகவும் மகத்தானதாக இருக்கிறது. நாம் சரியாக அதைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலகத்தின் மிகப்பெரிய களம் இதுதான். தேவன் இதில் ஒன்றை செய்யப் போகிறார்; சரியாக அது இப்பொழுதே நடக்க இருக்கிறது. உலகம் முழுவதும் நடக்கின்ற காரியங்களைப் பார்க்கும்போது நம்மைத் திடுகிடச் செய்கிறது. ஓ, நண்பனே, ஏதோ ஒரு காரியம் நிகழ ஆயத்தமாயிருக்கிறது. நாம் எதைக் குறித்துப் பேசினோமோ மற்றும் கூறினோமோ அது சரியாக இங்கேயே இருக்கிறது. பார்த்தீர்களா? இது ஏற்கனவே துவங்கப்பட்டு, எவ்விடத்திலும், அது எழும்பிக் கொண்டிருக்கிறது. 25. இந்தக் காலை வேளையிலே, ஒரு மகத்தான காட்சியை உங்களுக்கு விவரிக்க விரும்புகிறேன். ஒரு செம்மறி ஆட்டுக் குட்டி வயலில் புல் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். திடீரென அந்தக் குட்டி பதற்றமடைந்து அதிர்ந்துபோனது. ஏனெனில் அங்கே அதற்குப் பின்னால் இருக்கிற நாணல் புதரிலிருந்து ஒரு சிங்கம் எழும்பினது. அது இலகுவாக அந்த ஆட்டைப் பிடிக்கிற அளவிற்கு வந்தது. புரிகிறதா? அந்த சிங்கம் தன் வாலை தரையில் தட்டிக்கொண்டு தாவிப்பாய்வதற்கு ஆயத்தமாய் நின்றது. 26. அவ்விதமாகத்தான் சபையானது களத்தில் இருக்கிறது. கம்யூனிசத்தின் இருளானது உலகத்தின் எல்லா இடத்திலும் பரவிக்கொண்டிருக்கிறது. ஒரு பெரிய நிழலைப் போன்று மூடிக்கொண்டிருக்கிறது. 27. இது எதிர்மறை விதியாய் இருக்கிறது. உதாரணத்திற்கு முந்தைய நாளைப்போன்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளானது தான் விடிவதற்கு முன்பாக எப்போதுமே காரிருளாக இருக்கும், ஏனெனில் இருளைத் தள்ளிக்கொண்டு பொழுது விடிகிறது. அது ஒரு எதிர்மறை விதியாக இருக்கிறது. பார்த்தீர்களா! ஆகவே, பொழுது விடிவதற்கு முன்னே அது பயங்கர இருளாக இருக்கும். 28. நாம் இப்போது அதே காரியத்தில்தான் இருக்கிறோம். விடியும் முன்னர் இருக்கும் இருளாக இப்பொழுது இருக்கிறது. பாவ மனிதனை நிறைவேறுதலுக்குக் கொண்டு வரும்படியாக காரிருளின் நிழலானது தள்ளுகிறது. நீங்கள் கவனித்தீர்களா, இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில், கம்யூனிஸ்ட் நாடுகளெல்லாம் தொழுவில் இருக்கும் கிறிஸ்துவின் படத்தை அனுப்புவதற்கு பதிலாக, அதெல்லாம் இல்லை என்று எதிர்ப்புத் தெரிவித்து, தேவன் என்று அழைக்கப்படுகிற எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை உயர்த்தி, உலகத்தின் பெருவாரியான பகுதியை தன்னுடைய பிடியில் கொண்டவனாகிய ஸ்டாலினின் படத்தைப் போட்டு சிறு புத்தகங்களை அனுப்புகிறார்கள். இப்பொழுது இன்னொரு காரியம் என்னவென்றால், இவையெல்லாம் வேதவாக்கியம் நிறைவேறும்படியாக நடக்கிறது. 29. பின்னர் இன்னொரு காரியம் நிறைவேறிக் கொண்டிருக்கிறதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த சம்பிரதாய சபைகளில் இருக்கும் பாரம்பரிய மக்கள், தேவனுடைய அசைவுக்கு எதிராக எழும்புகின்றனர். வேதம் என்ன சொல்லுகிறது தெரியுமா, ''தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதன் வல்லமையை மறுதலிப்பவர்களாய் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை விட்டு நீ விலகு'' என்கிறது. ஆகவே, அவர்கள் தங்களுடைய நிலையை எடுத்துக் கொள்கிறார்கள். 30. கம்யூனிசமும் அதனுடைய நிலையை எடுத்துக் கொள்கிறது. 31. தேவனுக்கே ஸ்தோத்திரமுண்டாவதாக! பரிசுத்த ஆவியானவரும் அவருடைய நிலையை எடுத்துக்கொள்கிறார்! ஆம், சத்துரு வெள்ளம் போல வரும்போது அதற்கு எதிராக கொடி ஏற்றுவேன் என்றார். அது உண்மை. மேலும் சபையும் அவளுடைய நிலையை எடுத்துக் கொண்டது. நான் பரிசுத்த ஆவியின் சபையைக் குறிப்பிடுகிறேன். 32. இப்போது நண்பர்களே, என்னுடைய ஆர்வம் எல்லாம் அதில் தான் இருக்கிறது. அதற்காகவே நான் இருக்கிறேன். வெளியே நான் செல்வது, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதற்காகத்தான். ஆனால், இங்கே ஒரே ஒரு காரியத்தின் மேலாக மாத்திரமே ஆர்வமுடையவனாக இருக்கிறேன், இது தேவனால் மறுபடியும் பிறந்த சபையாக இருக்க வேண்டும் என்பதே. அது உண்மை, எப்படிப் பார்த்தாலும் என்னுடைய ஆர்வமெல்லாம் அதில் தான் இருக்கிறது. நான் இந்த துணை விதிகள் (By laws) டீகன்கள் மற்றும் சபை ஒழுங்கின் காரியங்கள் முதலானவைகளில் எனக்கு ஆர்வம் இல்லை. நாம் ஜீவித்துக் கொண்டு இருக்கிறதான இந்த நாளில், சபையானது பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதிலேயே நான் ஆர்வமுடையவனாக இருக்கிறேன். அதுதான் அடிப்படை காரியமாய் இருக்கிறது, அதைத்தான் நாம் எதிர் நோக்கிக் கொண்டு இருக்கிறோம். இப்போது நாம் ஜெபம் செய்யலாம். 33. பரலோகப் பிதாவே இந்தக் காலையில் எங்கள் மத்தியில் இறங்கி வருவீராக. இதை அருளும் கர்த்தாவே! தேவனுடைய ஆவியானவர் தாமே இந்த ஆராதனையை பொறுப்பேற்றுக் கொள்வாராக. இங்கு நடக்கும் வேலையை ஆசீர்வதிப்பீராக. கர்த்தாவே, எங்கள் சகோதரன் கிரஹாமை ஆசீர்வதிப்பீராக. தேவனே, அவர் இன்றிரவு வானொலியில் பேசுவதற்கு அவருக்கு வார்த்தைகளின் ஞானத்தைத் தாரும். அவர் வார்த்தையின் பிரசங்கத்தினால் ஜனங்களை உலுக்குவாராக. இதை அருளும் கர்த்தாவே. மற்றும் பாவிகள் அழுது, தங்களுடைய அறையில் முழங்கால் படியிட்டு, தங்களுடைய இருதயங்களை கிறிஸ்துவுக்குத் தருவார்களாக. இதோ இந்தக் காலை வேளையில் அவிசுவாசிகள் எவராகிலும் இருந்தால், அல்லது கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இருந்தால், அவர்களும் இங்கே வருவார்களாக! 34. இப்போது, கர்த்தாவே, இந்தக்காலை வேளையிலே ஜனங்களின் இருதயத்தில் ஒரு எழுப்புதலை துவங்குவீராக. இது தாமே ஆவியானது புதுப்பிக்கப்படும் நேரமாக இருக்கட்டும், புதுப்பிக்கப்படட்டும். ஓ, பிதாவே "நீர் வந்து எங்கள் ஒவ்வொருவரையும் கரம் பிடித்து இந்த இடுக்கமான வழியிலே எங்களை நடத்திச் செல்வீராக." எங்களுக்கு முன்பாக இங்கு என்ன இருக்கிறது என்பதை காணும்படியாக உமது இரகசியங்களை பரிசுத்தவான்களின் இருதயத்திற்கு இந்தக் காலையில் வெளிப்படுத்துவதற்கான இங்கே அமைக்கப்பட்ட ஒழுங்கின் இந்த மகத்தான காட்சியை எங்களுக்குக் காட்டும். நாங்கள் அவ்விதம் நடந்து போகையிலே கர்த்தாவே, தேவனுடைய சர்வாங்க வர்கத்தைத் தரித்து தீரமுள்ள போராளிகளாக எதிராளிகளை சந்திக்கப் போவோமாக. ஆனால் நாங்கள் அவனுடைய தந்திரத்தை அறியாமல் எப்படி அவனைச் சந்திக்க முடியும்? நாங்கள் புரிந்து கொள்ளும்படி இந்தக் காலையில் எங்களுக்கு உதவி செய்யும், அவனுடைய முன்புலத்தை எங்களுக்குக் காட்டும், அதனால் நாங்கள் அவனை எங்கே சந்திக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோமாக. இவைகளை இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறோம், ஆமென். 35. நாம் லூக்கா 2-ஆம் அதிகாரத்தை வாசிப்போமாக. ''அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரிய நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.'' 36. இப்பொழுது நான் சொல்ல வேண்டும் என்றிருக்கின்ற பாகத்திற்கு வரும்படி சற்று பிண்ணனிக்காக இந்தக் காலை வேளையில் இதைக் கூற விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் கர்த்தருடைய ஆவிக்குள்ளாக பிரவேசிக்க உங்களை அனுமதியுங்கள். 37. இன்றைய நாளில், உலகம் முழுவதும், எல்லோரும் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள், இப்போது அது வெறும் பாரம்பரியமாக உள்ளது. இயேசுவானவர் டிசம்பர் 25-ல் அல்லது 5-ல் பிறக்கவில்லை. அவர் அந்நாளில் பிறப்பது என்பது கூடாத காரியம் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில் அந்நேரத்தில், யூதேயாவின் குன்றுகள் எல்லாம் பனியினால் நிறைந்து இருக்கும், ஆகவே அது எப்படி நடக்கக்கூடும்? இயேசுவானவர் பொதுவாகவும் வானசாஸ்திரம் முதலானவைகளின்படியும், அவர் ஏப்ரல் 1ம் தேதியை சுற்றியுள்ள தேதியில் பிறந்திருக்க வேண்டும் என்று உரைக்கிறார்கள். அதாவது வசந்த காலமாக இருக்கும் நேரத்தில் அது நடந்திருக்கும். ஆனால் அவர் உலகத்திற்கு வந்ததை நினைவுப்படுத்தும்படியாக, அவரை ஆராதிப் பதற்காக இந்த நாளை ஒதுக்கி வைத்திருப்பது பரவாயில்லை. 38. இதுவரை தேவன் இந்த உலகத்திற்கு கொடுத்ததான மகத்தான அன்பளிப்புகளில் ஒன்று இயேசு கிறிஸ்துவே. நாம் அதை அறிந்திருக்கிறோம். மேலும் இப்பொழுது இந்த காலை வேளையில் அவருடைய "தெய்வீகத் தன்மையைப்" பற்றியும், அவர் யார் என்றும் நான் பேச விரும்புகிறேன். அநேக மக்கள் அவரை இன்னுமாக தொட்டிலில் உள்ள ஒரு சிறு குழந்தையாகவே வைத்திருக்கிறார்கள். அது காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது. அது அவர் உண்மையிலே என்னவாக இருக்கிறார் அவருடைய தெய்வீகத் தன்மை என்ன என்பதைக் கொண்டுவரும்படியான வெறுமென நாடகத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது, அவ்வளவுதான். 39. மேலும் அவர் யோவான் நாள் மட்டும், 'அவர் எப்படிப்பட்டவர் என பேசப்பட்டிருந்தாரோ அந்தப்படியே வேதவாக்கியத்தின்படி வந்தார்' என்று அவர் கூறினார், அப்படியே பின்னிட்டு பார்ப்போம் என்றாலும், ஆதியாகமத்தில் 'ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும்' என்று தீர்க்கதரிசனமாய் உரைத்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர் இந்தக் குழந்தையாகிய இயேசு கிறிஸ்து தான். அவ்விதமாகவே கடந்துபோன தீர்க்கதரிசிகள் எல்லாம், கிட்டதட்ட வேதத்தில் உள்ள ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவருடைய முதல் வருகையையும் இரண்டாம் வருகையையும், குறித்து அவர் எப்பொழுது இந்த உலகத்திற்கு வருவார் என்பதை கூறியுள்ளனர். 40. இயேசுவின் வருகை மூன்று முறையாக உள்ளது. அவர் முதலாவது வந்தது, அவருடைய சபையை மீட்டுக் கொள்வதற்காக. அவரின் இரண்டாவது வருகை அவருடைய சபையை ஏற்றுக் கொள்வதற்காக. அவரின் மூன்றாவது வருகையில் அவருடைய சபையோடு வருவார். வேதத்தில் எல்லா காரியங்களும் திரித்துவங்களாய், மூன்றுகளாய் இருக்கிறது. ஆனாலும் எல்லாம் கிறிஸ்துவுக்குள் ஒன்றாய் இருக்கிறது. நினைவிருக்கட்டும், அவர், முதல்முறை சபையை மீட்டுக்கொள்ளவும், இரண்டாவது முறை சபையை ஏற்றுக் கொள்ளவும், மூன்றாவது அவருடைய சபையோடு இராஜா இராணியுமாய் வருகிறார். 41. இப்போது, அவருடைய முதல் வருகையைக் குறித்து கொஞ்சம் பேசலாம். பின்னர் அவர் இங்கே இருக்கிறதை குறித்தும், அதன்பின் அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்தும், பின்னர் அவருடைய மூன்றாம் வருகையை குறித்தும் கர்த்தருக்கு சித்தமானால் சிறிது பேசலாம். 42. இப்போது அந்த நாட்களில் சபைக்கு எதிராக மகத்தான உபத்திரவம் உண்டாயிருந்தது. அகஸ்துராயன் ஒரு மகத்தான திட்டத்தைச் செய்து எல்லா ஜனங்களின் மேலும் வரிவசூலிப்பதாய் இருந்தான். அந்தக் காரியமானது ஒரே ஒரு நோக்கத்துக்காக மாத்திரமே செய்யப்பட்டது. அது என்னவெனில் தேவனுடைய மகத்தான தீர்க்கதரிசனம் நிறைவேற வேண்டும். 43. இப்பொழுது நீங்கள் வேதத்தில் ஏதாவது ஒரு காரியம் சற்று புதிராகவும் மற்றும் மூடநம்பிக்கை போல் காணப்பட்டால், நீங்கள் செய்யவேண்டியது ஒரே ஒரு காரியம் தான், தேவனுக்கு சிறிது நேரத்தை கொடுங்கள். தேவன் ஒன்றும் அவசரப்படவில்லை. அப்படியான ஒரு அவசரத்துக்குள்ளாவது நாம் தான். தேவனுக்கு சிறிது நேரத்தைக் கொடுத்துப் பாருங்கள், அப்பொழுது நீங்கள் பழைய தீர்க்கதரிசனச் சக்கரங்களும், பல் சக்கரங்களும், நேராக அந்த காட்சிக்குள்ளாக செல்வதை காண்பீர்கள். ஒரு படம் உருவாகுவதைப் போன்று அது காட்சிக்கு வரும். 44. அன்றொரு நாள் ஒருவர் பேசிக்கொண்டு இருந்ததைப் போன்று உள்ளது. ''தேவன் என்னவாக இருந்தார்?" என்று பேசிக்கொண்டிருந்தார். தேவன் லட்சோப லட்சம் வருடங்களுக்கு முன்னர், அவர் இங்கே இருக்கின்ற இந்த விண்வெளியைப் போன்று இருந்தார். அதற்கு பின்னர் அவர் லோகோஸ்க்குள்ளாக ஒன்று திரண்டார்; பின்னர் லோகோஸ்குள்ளாக இருந்து கீழாக கிறிஸ்துவுக்குள் வந்தார். பாருங்கள், தேவன் அவ்விதமாக பூமிக்கு வந்து பின்னர் நேராக மீண்டுமாய் தேவனுக்குள்ளாகச் செல்கிறார். நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா? அப்படி ஆகாய வெளியிலிருந்து, அதாவது நித்தியத்திலிருந்து சுழன்று கொண்டு, ஒன்று சேர்ந்து லோகோஸ்சுக்குள்ளாக வந்து அதன்பின் லோகோஸ்சிலிருந்து அப்படியே அந்த மனிதனுக்குள்ளாகச் சென்று, பின்னர் மீண்டுமாய், திரும்புகிறார். எதற்கு என்றால், விழுந்துபோன மனிதனை மீட்க வேண்டும். அது ஒன்று மாத்திரமே அவருடைய நோக்கம். 45. இப்போது அவர் மீட்பராக வந்ததற்கு காரணம் அதுதான். இப்போது தேவன் ஒரு மீட்பராக ஆவதற்கு முன்பாக, நியமத்தின்படி அவர் ஒரு இனத்தான் மீட்பனாக இருந்தாக வேண்டும். அவர் ஒரு நெருங்கிய உறவினராக இருக்க வேண்டியதாக இருந்தது. 46. ஆதியிலே தேவன் அவருடைய முதல் மனிதனை உண்டாக்கினபோது அவர் அவனை ஆவியைக் கொண்டு உருவாக்கினார். ஆவியானது மனிதனுடைய காண முடியாத பாகமாக இருக்கிறது, நீங்கள் அதனை காணமுடியாது. இப்பொழுது தேவன் மனிதனை அவருடைய சொந்த சாயலில் உருவாக்கினார். நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறீர்களா? (சபையார் "ஆமென்" என்று சொல்கிறார்கள்) சரி. தேவன் மனிதனை அவருடைய சொந்த சாயலில் உண்டாக்கினார். "தேவன் ஆவியாக இருக்கிறார்," என்று வேதாகமம் கூறுகிறது. முதலாவதாக உருவாக்கப்பட்ட மனிதனானவன் எல்லா சிருஷ்டிப்பின் மேலாக ஆளுகை செய்யும்படி உண்டாக்கப்பட்டான். பரிசுத்த ஆவியானவர் எப்படி இன்று சபையின் மேலாக ஆளுகை கொண்டிருக்கிறாரோ அதுபோன்று அவன் இருந்தான். அவன் சிருஷ்டிப்பை வழி நடத்தினான். அவன் விலங்குகளை வழி நடத்தினான். 47. ஆனால் நிலத்தைப் பண்படுத்த ஒரு மனிதனும் இல்லாதிருந்தது. எனவே தேவன் மனிதனை பூமியின் மண்ணினால் உருவாக்கினார். அந்த மனிதனுக்கு அவர் குரங்கைப் போல் கைகளைக் கொடுத்திருந்தாலும், கரடியைப் போல் பாதங்களைக் கொடுத்திருந்தாலும், எப்படியோ அவை எல்லாவற்றையும் ஒன்று கூட்டி அவனை ஒரு மனிதனாக உண்டாக்கினார். இருந்த பொழுதிலும் இந்த மனிதனுக்குள்ளாக இந்த அழிவில்லாத ஆவியை வைத்தார். அது ஒருபோதும் அழிந்து போகாது. அப்பொழுது அவன் காட்டுமிராண்டியைக் காட்டிலும் மேலானவனாக ஆனான், அவன் ஒரு மனிதனாக ஆனான். 48. மேலும் இந்த மனிதனைக் குறித்து நாத்திகர்களும் அதுபோன்ற சிலரும் சுற்றிவளைத்து வாதாடுகிறார்கள். அப்படிதான் நினைக்கிறேன். ஆனால் தேவன் தம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்கிற நேரமானது வந்தது. தேவன் கிரியை செய்ததான ஒரு நேரமானது இங்கே இருந்தது, அது உண்மை. ஆகவே இப்பொழுது மக்கள், ''அவனுடைய பாதம் பார்ப்பதற்கு ஒரு கரடியைப்போல் இருக்கிறது, அவனுடைய கைகள் ஒரு வாலில்லா குரங்கு அல்லது குரங்கைப் போல் இருக்கிறது'' என்று விவாதித்து அவனுடைய துவக்கமே அதிலிருந்துதான் வந்தது என்று கூறுவார்கள் என்றால், அதற்கு அதனோடு எந்த சம்பந்தமும் இல்லை. 49. இது மாமிசத்தினால் ஆன சரீரமாய் இருக்கிறது. ஒரு வீட்டில் குடியிருப்பதை போன்று அவன் இதற்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிறான். இது திரும்பவும் இந்த பூமியின் மண்ணுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஆவியோ அழிவில்லாதது. அது தேவனிடமிருந்து வருகிறது. அதுதான் தேவனுடைய சாயலாக இருக்கிறது. தேவன் ஆவியாக இருக்கிறார். 50. அந்த மனிதன் அவனுடைய மூலநிலையை ஏதேன் தோட்டத்தில் இழந்து போனான். பாவத்தாலும், அவிசுவாசத்தினிமித்தமும், தேவனோடு அவன் கொண்டிருந்த ஐக்கியமும் உறவும் அங்கே துண்டிக்கப்பட்டது. எதின்மேலாக அவிசுவாசம் வைத்தான்? ''தேவனுடைய வார்த்தையின் மேலாக. ஒரு சமயம் ஏவாளுக்கு தேவனுடைய வார்த்தையை தள்ளிப் போடுகிறதினால், அவளுக்கு அது எவ்வளவு வெளிச்சத்தைக் கொடுக்கும்" என்று அவளுக்கு ஒரு காட்சியை அமைத்து இதைக் கொஞ்சம் காரணகாரியத்தினால் சிந்தித்துப் பார் என்று சொல்லப்பட்டது. நீங்கள் அப்படி செய்யக் கூடாது. தேவன்... 51. தேவனுடைய வார்த்தைக்கும் காரணகாரியத்திற்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. தேவனுடைய வார்த்தை உண்மையாய் இருக்கிறது. காரண காரியம் தவறாய் இருக்கிறது. நீங்கள் காரண காரியத்தைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அது உண்மை. பாருங்கள், நம்முடைய சிந்தையானது தேவனுடைய நித்தியமான ஞானத்தை புரிந்து கொள்ளுகிற அளவிற்கு போதுமானதாக இல்லை. அதினால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே நீங்கள் காரண காரியத்தைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் அதை விசுவாசித்தே ஆகவேண்டும். 52. அதன் பிறகு தான் நம்முடைய முதல் தாய்க்கும் தகப்பனுக்கும் படமாக வர்ணம் தீட்டப்பட்டது. அதினால் அவர்கள் விழுந்து போனார்கள். அதுதான் தேவனுடன் இருக்கும் உறவுமுறையை உடைத்து ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே துரத்தினது. அந்த நேரம் முதற்கொண்டு தேவன் அந்த தோட்டத்தில் மேலும் கீழுமாக உரக்க சத்தமிட்டு அவருடைய இழந்துபோன பிள்ளையைத் தேடிக் கொண்டிருக்கிறார். 53. ஆகவே, தேவன் அவனை மீட்டுக்கொள்ள வேண்டுமென்றால் ஒரே வழி அவரே கீழே இறங்கி; வேறொருவர் மூலமாக அல்ல, அல்லது வேறொருவரை அனுப்புவதன் மூலமாக அல்ல, அவர்தாமே மீட்க வேண்டியதாயிருந்தது. அவரால் ஒரு தூதனை அனுப்பமுடியவில்லை. அது சரியாகவும் இருக்காது. ஆகவே, தேவன் மனிதனை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி அவர் தாமே இறங்கி வந்து அவனை மீட்டுக்கொள்ள வேண்டும். 54. இப்பொழுது, இங்கு யாராவது பாவம் செய்து, நான் இந்த கூட்டதிற்கு, நீதிபதியாய் உங்கள் எல்லார் மேலும் அதிகார வரம்பை உடையவனாய் இருந்து, அந்த மனிதன் பாவம் செய்ததினால், "சகோதரன் கிரஹாமே நீர் அவனுக்காக கிரயத்தை செலுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று சொல்லுவேன் என்றால், அது நியாயமாய் இருக்காது. அல்லது என்னுடைய சொந்த மகன் கிரயத்தை செலுத்துவான் என்று சொல்வேனென்றாலும் அதுவும் நியாயமாய் இருக்க முடியாது. இப்பொழுது நான் நியாயமாய் இருக்கக்கூடிய ஒரே வழி அவனுடைய ஸ்தானத்தை நானே எடுத்துக் கொள்வதுதான். ஏன் தெரியுமா? ஏனெனில் நியாயத்தீர்ப்பை அளித்தவன் நான்தான். ஆகவே அந்த மனிதனை நான் மீட்க வேண்டும் என்றால், நானே (நான் தானே) அவனுடைய ஸ்தானத்தை எடுத்தாக வேண்டும். நீங்கள் இன்னும் என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? (சபையானது ''ஆமென்" என்கின்றார்கள்). 55. இப்பொழுது, பாருங்கள் நீங்கள் ஒரு காரியத்தை கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது இந்த மனிதனை மீட்க தேவன் மாத்திரமே வழியாய் இருப்பதினால் அவரே இறங்கி வந்து அவனுடைய ஸ்தானத்தை எடுக்க வேண்டியதாய் இருந்தது. மோசேயினால் கொடுக்கப்பட்ட நியாயபிரமாணமும் மீட்புக்கு அதைத்தான் கோருகிறது. அதாவது இனத்தான் மீட்பனால் தான் அதை மீட்கமுடியும். அப்படிப்பட்டவன் முதலாவதாக அதற்கு தகுதியுள்ளவனாக இருக்க வேண்டும். அவன் அந்த கிரயத்திற்கு பாத்திரமான ஒரு மனிதனாய் இருக்க வேண்டும். அப்பேற்ப்பட்டவன், பொது ஜனங்களுக்கு முன்பாக அவனுடைய சாட்சியைக் கூறி, விழுந்து போன மனிதனின் இழக்கப்பட்ட சுதந்திரத்தை மீட்டுக்கொள்ளலாம். ஆகவே தேவன் ஒருவரே தகுதியுள்ளவராயிருக்கிறார். அவர் சுமார் ஆயிரத்துத் தொள்ளாயிரம் ஆண்டுகள் முன்னர், ஒரு குழந்தை வடிவில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, பரிசுத்த ஆவியால் நிழலிடப்பட்டவராய், பாலுணர்ச்சியால் பிறவாதவராய் இருந்தார். அவரே தேவன் தேவனுடைய இரத்தம் அவருக்குள்ளாக இருந்தது. 56. குழந்தையானது எப்போதுமே தன் தகப்பனின் இரத்தமாக இருக்கும், அது ஒரு போதும் தாயினுடையதாய் இராது. நாம் யாவரும் அதை அறிவோம். நான் இதற்குமுன் அநேகமுறை போதித்து இருக்கிறேன், குழந்தைக்கு தன் தாயின் இரத்தத்தில் ஒரு துளி கூட அதனிடத்தில் இராது என்று உங்களுக்குத் தெரியும். கொஞ்சம் கூட இராது. 57. இல்லை, அதில் எந்த சம்பந்தமும் இல்லை. அது எப்போதுமே ஆணின் இரத்தமாகத்தான் இருக்கும். ஒரு பெட்டைக் கோழியினால் முட்டையிட முடியும் ஆனால் அது கருதரிக்கவில்லை என்றால், அது ஒருபோதும் குஞ்சு பொறிக்காது. அந்த முட்டை எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் சரி, அவள் எவ்வளவு நன்றாக சூடு ஏற்றினாலும் சரி, பெட்டைக் கோழி சேவலோடு சேர்ந்தாலொழிய, அது கருவாக மாறாது. அது அங்கேயே அடைகாத்து அழுகிப்போகும் (அது உண்மை.) ஏனெனில் ஜீவ கிருமி ஆணிடமிருந்தே வருகிறது. 58. ஆகையால், மரியாள் எந்த ஒரு மனிதனையும் அறியாதிருந்த பொழுது, அவள் ஆணோடு, சர்வ வல்ல யெகோவா தேவனோடு இருந்தாள், அவர் அவள் மீது நிழலிட்டார். சிருஷ்டி கர்த்தராகிய தேவன் எந்த மனிதரையும் அறியாத மரியாளின் கர்ப்பத்தில் ஒரு இரத்த அணுவை உண்டு பண்ணினார். பாலுணர்ச்சியினால் இங்கு பிறந்த நம்முடைய ஜீவனை மீட்கும்படி சிருஷ்டிக்கப்பட்ட தேவனுடைய இரத்தத்தை அதுதான் கொண்டு வந்தது. 59. அதன் பிறகு அந்த இரத்தம் கல்வாரியின் சிலுவையின் மேல் இம்மானுவேலின் இரத்த நாளங்களிலிருந்து வெளியே வந்தது. மேலும் கல்வாரியில் அந்நாளில் இரத்த மாற்றத்தை செய்த பரிசுத்த வல்லமையானது மீட்பையும் இரட்சிப்பையும் இன்றும் கொண்டதாக இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆமென். அது சரியே. நாம் தேவனுடைய இரத்தத்தினாலே மீட்கப்பட்டிருக்கிறோம். ''நாம் இரத்தத்தால் வாங்கப்பட்டோம், இரத்தத்தால் மீட்கப்பட்டோம், அது தேவனுடைய சொந்த இரத்தமே", என்று வேதாகமம் கூறுகிறது. 60. அது எப்படி தேவனுடைய இரத்தமாக இருக்க முடியும்? தேவனுக்கு இரத்தம் இல்லையே. அது எப்படி சாத்தியமாகும்? எப்படியெனில், நம்மை மீட்கும் பொருட்டு தேவனே அதை சிருஷ்டித்தார்; அது தேவனுடைய சிருஷ்டிக்கப்பட்ட இரத்தம். அவர் சிருஷ்டித்த சரீரத்திலே அவரே வந்து ஜீவித்தார். ஆகையால் அவரால்.... தேவன் சோதனையினால் பாடுபட வேண்டியதாயிருந்தது. ஆனால் அவரால் சோதனையினால் பாடுபட கூடாமல் இருந்தது. அவர் பாலுணர்ச்சி சோதனையால் பாடுபடவேண்டும். அவர் பிசாசின் மூலம், ஐஸ்வரியத்தினாலும், வல்லமையினாலும், அதிகாரத்தி னாலும் மற்றும் எல்லாவித சோதனைகளாலும் பாடுபட வேண்டியதாய் இருந்தது... இவை எல்லாவற்றினாலும் அவர் பாடுபட வேண்டியதாய் இருந்தது. இவை எல்லாவற்றையும் செய்வதற்கு அவர் தேவனாக ஆவியில் இருந்து செய்ய முடியாது; தேவன் மாமிசத்தில் இருக்கவேண்டும். 61. இப்போது நான் "கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மை" என்கின்றதன் பேரில் இந்தக் காலையில் பேசிக்கொண்டிருக்கிறேன், ஆகவே நாம் இன்றைக்கு ஆராதித்துக் கொண்டிருக்கிறவர் இன்னார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். மாட்டுத் தொழுவத்தில் உள்ள குழந்தையாய் அல்ல; அல்லது சான்டா கிலாசை (கிறிஸ்துமஸ் தாத்தா) அல்ல; அவருடைய குமாரனின் தெய்வீகத் தன்மையில் வெளிப்பட்ட சர்வ வல்லமையுள்ள தேவனை ஆராதிக்கிறோம். 62. கவனியுங்கள், பிறகு அந்த இரத்தம் கீழே வந்தது, அது இயேசு கிறிஸ்துவாக இருந்தது. தேவன் தாமே ஆவியிலிருந்து வெளியே வந்து கிறிஸ்து இயேசுவுக்குள் சென்றார். "தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து உலகத்தை தமக்குள் ஒப்புரவாக்கினார்" என்று வேதாகமம் கூறுகிறது. அது சரிதானே? தேவன் தாமே (யெகோவாவே) கிறிஸ்துவுக்குள்ளாக ஜீவித்து நமக்கு இனத்தானாக ஆனார். எப்படியெனில் அவர் நம்மைப் போன்று மனித சரீரத்தில் பிறந்ததினால். அது சரிதானே? இரத்த அணுக்கள் தேவனால் உருவாக்கப்பட்டது. மாமிச அணுக்களோ மரியாளின் கர்ப்பத்திற்குள்ளாக உருவாக்கப்பட்டு குழந்தையை கொண்டு வந்தது. தேவன் இறங்கி வந்து மாமிசத்தில் ஜீவித்து, நம்மை போலவே எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அது சரியே! 63. இப்போது, அவர் அதை செய்த பிறகு தன்னுடைய இரத்தத்தை இலவசமாய் கொடுத்தார். அவர் அதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் நேராக உயர மகிமைக்கு சென்றிருக்கலாம். அவர் மறுரூப மலையின் மேல் இருந்தது போன்றே அவர் மறுரூபமாகி ஒரு போதும் மரிக்காமலே பரலோகம் சென்றிருக்கலாம். ஆனால் நமக்காக மரிப்பதற்கு சித்தம் கொண்டவராய், அவருடைய இரத்தத்தை கல்வாரியிலே இலவசமாகக் கொடுத்தார். அது சரியே. அவர் துக்கம் நிறைந்த மனிதனாய், துயரம் கலந்தவராய், எல்லோருக்கும் முன்பாக சாட்சி பகன்றார். 64. ரூத்தின் புத்தகம் இதை எடுத்துக்காட்ட கூடிய ஒரு அழகான புத்தகம். அங்கே போவாஸ் கிறிஸ்துவுக்கு பாவனையாக இருந்தான். ரூத் தேசத்தை விட்டு (நகோமி என்று சொல்ல வந்தேன்) வெளியேறி அந்நிய தேசத்திற்கு சென்று பின்மாற்றத்தில் போனவளாய் திரும்பி வரும்போது அவளோடு ரூத்தையும் கொண்டு வந்தாள். ரூத் திரும்பி வந்தபோது... ரூத் மோவாப் தேசத்தைச் சேர்ந்தவளாய் இருந்தாள். அவள் திரும்பி வந்தபோது, அவள் மோவாபிய ஸ்திரீயாய் இருந்தாள், அது முற்றிலுமாக புறஜாதி மணவாட்டிக்கு (சபைக்கு) ஒப்பனையாக இருந்தது. 65. அவள் நகோமியை அனுப்ப வந்தபோது நகோமி அவளை முத்தமிட்டு அவளுடைய ஜனத்தாரிடம் போகும்படி சொன்னாள். அதற்கு அவளோ "நீர் போகும் உம்முடைய ஜனத்தாரிடத்திற்கு நானும் வருவேன், உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம், நீர் வசிக்கும் ஸ்தலமே என்னுடைய ஸ்தலம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன், நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து அங்கே அடக்கம் பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரிக்காது" என்றாள். 66. அதுதாமே புறஜாதி சபை கிறிஸ்துவுக்குள் வருகின்ற காட்சியாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு சமயத்தில் நாம் வேற்றுலக ஜீவியாய் தேவனிடமிருந்து வெகு தூரமாக இருந்தோம். யூதர்கள் மட்டுமே இரட்சிக்கப்படக் கூடியவர்களாய் இருந்தார்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள்ளாக நாம் மரித்தபடியினாலே ஆபிரகாமின் வித்தை எடுத்துக் கொண்டவர்களாய் வாக்குத்தத்தத்திற்கு சுதந்திரவா ளியானோம். இப்பொழுது கிறிஸ்து ஒரு புறஜாதி மணவாட்டியை பெற்றுக்கொண்டார். அது முற்றிலும் சரியே. 67. இப்போது இஸ்ரவேலின் பின்வாங்கிப் போன நிலைமையிலிருந்து அதாவது நகோமியின் இழந்துபோன சுதந்திரத்தை போவாஸ் மீட்டுக்கொள்ள வேண்டுமென்றால் மோவாப்... வெளியே வரவேண்டும். அதாவது போவாஸ் வெளியே வரவேண்டும். அவன் வெளியே வந்து வாசலுக்கு முன்பாக அவனுடைய பாத இரட்சைகளை தூக்கி எறிந்து அங்கிருக்கிற மூப்பர்களுக்கு முன்பாக இழந்துபோன அந்த ஸ்திரீயை அவளுடைய நிலைமைக்கு திரும்பவும் அவன் மீட்டுக் கொண்டான் என்பதை காட்டும் பொருட்டு அவன் எல்லோருக்கும் முன்பாக சாட்சியை தெரிவிக்க வேண்டும். அதை செய்வதின் மூலம் அவன் எதிர் நோக்கிக் கொண்டிருந்த ஸ்திரீயையும் (அவன் பெற்ற அவனுடைய மணவாட்டியையும்) அதினோடு வாங்கிக் கொண்டு வந்தான். அவன் மணவாட்டியைப் பெற்றுக் கொள்ளுவதற்கு முதலாவது இந்த ஸ்திரீயை அவன் மீட்டுக் கொள்ள வேண்டியதாய் இருந்தது. உங்களால் அதை காணமுடியவில்லையா? 68. அதே காரியத்தைத்தான் கிறிஸ்துவும் செய்தார். எருசலேம் வாசலில் அவர் எல்லோர் முன்னிலையிலும் சாட்சி பகர்ந்தார். அவர் அங்கே அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டு கல்வாரியில் கொல்கொதா குன்றின் மேல் நடத்திக்கொண்டு போகப்பட்டார். அவர் அந்த குன்றை அவருடைய சொந்த இரத்தத்தால் குளிப்பாட்டினார். அவர் ஆதியிலிருந்து விழுந்துபோன எல்லோருடைய நிலையையும் மீட்டு அவருடைய ஜனத்தை பாவத்தின் சாபத்திலிருந்தும், நரகத்தின் பிடியிலிருந்தும் மீட்டுக் கொண்டார் என்பதற்கு சாட்சியாக அதைச் செய்தார். 69. அவள் இப்போது எதைப் பெற்றிருக்கிறாளோ அதைக் காட்டிலும் அவளுக்கு இன்னும் அதிகமாக ஏதோ ஒரு காரியம் இந்த கடைசி நாட்களில் தேவை என்பதை அறிந்தவராய், அவர் "நான் உன்னை திக்கற்றவளாய் விடேன், நான் பிதாவினிடத்தில் வேண்டிக் கொள்வேன்; அப்போது அவர் உனக்குப் பரிசுத்த ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அனுப்புவார். அவர் உன்னோடு என்றென்றைக்கும் வாசம் பண்ணுவார்" என்றார். "இன்னும் கொஞ்சக் காலத்தில் இந்த உலகம் என்னைக் காணாது. ஆனால் நானோ உயர பரலோகத்திற்குப் போய் இந்தக் காரியத்தை ஒழுங்குப்படுத்திவிட்டு நான் திரும்பிவந்து உன்னோடும், உனக்குள்ளும் காலத்தின் முடிவுமட்டும் இருப்பேன்", என்று கூறினார். அதைக் குறித்துதான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர் களானால், ''ஆமென்" என்று கூறுங்கள். அது உண்மை. அதைத்தான் நான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறேன். அவரே மீண்டும் அவருடைய வல்லமையில் வருகிறார். 70. ''ஓ, அவர் யார்" என்று சொல்லிக்கொண்டே காலங்கள் கடந்துபோனது. இந்த காலையில் மக்கள் அவரை ஒரு சிறு ஆராதனையின் பொருளாக அந்த சிறிய மாட்டுத் தொழுவத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர்..... ஆனால் நான் அவ்விதமாக நினைப்பதில்லை. 71. நான் எப்படி நினைக்கிறேன் என்றால், பரிசுத்த ஆவியின் மூலமாக கிறிஸ்துவே நம்முடைய மகிமையின் நம்பிக்கையாய் இந்தக் காலையில் நம்முடைய இருதயத்திற்குள் இருக்கிறார். அது சரியே. 72. ஓ, அவர் உலகத்தால் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டார். தேவன் எப்போதெல்லாம் இந்த உலகத்துக்குள் வருகிறாரோ, அவர் வந்த போதெல்லாம் இந்த உலகம் அவரை வெறுத்தது. "நோவாவின் நாட்களில் நடந்தது போலவே தேவ குமாரனின் வருகையிலும் அப்படியே இருக்கும்." நாம் அந்த நாட்களில் தான் இருக்கிறோம் நண்பர்களே. 73. இப்பொழுது கவனியுங்கள், ''இன்னும் கொஞ்சக் காலத்தில் இந்த உலகம் என்னைக் காணாது. ஆனால், நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் உங்களோடும் உங்களுக்குள்ளாகவும் உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களோடு கூட இருக்கிறேன்" என்றார். அது சரிதான். அவர் இப்போது இங்கே இருக்கிறார். ஓ இந்நாளில், அவருடைய மகத்தான காட்சியானது மேலே சுழன்று அதே காரியத்தை நடந்தேறச் செய்கிறது என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மகத்தான நாடகமானது அமைக்கப் பட்டிருக்கிறது. இப்பொழுது மகத்தான காரியங்கள் சம்பவிப்பதைக் காண நாம் ஆயத்தமாக இருக்கிறோம். 74. சபையானது தாலாட்டும் தொட்டிலிலிருந்து கொண்டு வரப்பட்டது. அது சரியே, பெந்தெகோஸ்துக்கள் சில வருடங்களுக்கு முன்னர் அதை தாலாட்டினார்கள். அப்பொழுது ஜனங்கள் கற்களை எறிந்து பரியாசம் செய்து அதைப் பார்த்து சிரித்தார்கள். ஆனால் இப்பொழுதோ, அவள் வளர்ந்து முதிர்ச்சியடைந்திருக்கிறாள். அது முற்றிலும் சரியே. அந்த வேளையானது இப்பொழுது வந்திருக்கிறது. அல்லேலூயா. அது சரியே. அதில் தான் நான் ஆர்வம் உள்ளவனாய் இருக்கிறேன். அதாவது தேவனுடைய சபையானது ஒன்றாயச் சேர்ந்து வருவதைக் காண்பதில் ஆர்வமாய் இருக்கிறேன். நாம் இங்கேயும் அடிப்பட்டோம், அங்கேயும் அடிபட்டோம். ஆனால் தேவன் ஒரு துப்பட்டியை நம்மெல்லார் மேலும் வீசி நம்மை உள்ளே இழுத்துக் கொள்ளுகிற வேளையானது வந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால், சத்துருவானவன் வாசலண்டை இருக்கிறான். அல்லேலூயா! ஆம் ஐயா. 75. அவருடைய ஜனங்களைக் குறித்து அவர் சொன்னது என்னவென்றால்; தானியேல் சொன்னது என்னவென்றால்; "கடைசி நாளில் மகத்தான காரியங்கள் நடைபெறும். இந்தக் காரியங்கள் நிறைவேறும் போது, ஓ, அப்பொழுது விசுவாசத்தின் ஜனங்கள் அதற்கேற்றாற்போல் மகத்தான கிரியைகளை அந்த நாளில் செய்வார்கள்" என்று கூறினார். இப்பொழுது அந்த வேளையானது வந்துவிட்டது. பின்மாரியின் மகத்தான காட்சியை தேவன் காட்சியில் கொண்டு வந்திருக்கிறார். ''கடைசி நாட்களில் இந்த விதமாக சம்பவிக்கும், நான் மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும், குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். என் ஊழியக்காரர் மேலும், ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். நான் மேலே வானத்தில் அடையாளங்களையும் கீழே பூமியின் மேல் அடையாளங்களையும், அக்கினி ஸ்தம்பங்களையும், புகை ஸ்தம்பத்தையும் காட்டுவேன், கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாள் வரும், அப்பொழுது கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்பவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்," என்று யோவேல் கூறி இருக்கிறார். 76. இயேசுவானவர் "நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால் நான் செய்கிற இந்தக் காரியங்களை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் அதிகமான காரியங்களை செய்வீர்கள்," என்று கூறியிருக்கிறார். அல்லேலூயா! அல்லேலூயா! அவர் அங்கே வார்த்தையில் கூறியதைக் கவனியுங்கள், "நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால்; நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குக் கொடுக்கப்படும்," என்றார். 77. ஒரு சில வருஷங்களுக்கு முன்னர், இங்கே சுற்றுப் புறத்தில் உள்ள மக்கள் கூறினது என்னவென்றால், "ஓ, அந்த ஜெப கூடாரத்தில் உள்ள மக்கள் எல்லாம் பரிசுத்த உருளைகள், அவர்கள் எல்லோரும் இப்படி, அப்படி, இது, அது, என்றார்கள். அவர்களெல்லாம் பைத்தியகாரர்கள்," என்றார்கள். 78. ஆனால், நாமோ பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெறுமட்டுமாக அந்த கன்மலையின் மீது நின்றோம். அது உண்மை. இப்பொழுது சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை சபையில் உருவாகியிருக்கிறது. அது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அல்லேலூயா. ஓ! இப்பொழுது தேவன் எல்லா காரியத்தையும், முழு இடத்தையும் அசைக்கப் போகிற நேரத்தையே நோக்கிக் கொண்டிருக்கிறேன். சகோதரனே அது ஏற்கனவே, நிறைவேறக்கூடிய கட்டத்தில் இருக்கிறது. அது சரியாக இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது சரியே! 79. அவருடைய தெய்வீகத் தன்மை! அவர் யார்? சிலர் அவரை ஒரு சிறு குழந்தையாகவே வைத்துவிட்டார்கள். அந்த காணமுடியாத கட்டத்தில் இருந்தபோது அங்கே நின்று, அவருடைய கையை நீட்டி வெளிச்சம் உண்டாகக்கடவது என்று உரைத்துப் பேசினது அவர்தான். அப்போது வெளிச்சம் உண்டாயிற்று. அதுதான் இயேசு கிறிஸ்து! அவர் உலகத்தில் இருந்தார், அந்த உலகம் அவரால் உண்டாக்கப்பட்டது, ஆனால் உலகமோ அவரை இனங்கண்டு கொள்ளவில்லை. அவரே தேவனுடைய தெய்வீகத் தன்மை. அவர் அங்கே என்ன செய்தார் என்று கவனியுங்கள். நடந்த அதிசயத்தைக் குறித்தும் சத்தம் போடுவதைக் குறித்தும் பேசுகிறீர்களே? அவர், ஒன்றுமே இல்லாதிருந்தபோது இப்பொழுது இங்கிருக்கிற காரியங்களைப் பேசி அற்புதமாய் நடப்பித்தபோது; அவர் பேச அது அப்படியே ஆயிற்று. 80. அதே வல்லமை தான், அதே கிறிஸ்து தான் அல்லேலூயா! அடிப்படைவாதிகளும் தேவனுடைய வல்லமையை மறுதலிக்கிற ஜனங்களும் அது தவறு என்று கூறலாம். ஆனால், வார்த்தையைப் பேசி உலகத்தை உண்டாக்கின அதே வல்லமைதான்; பரிசுத்த ஆவியைப் பெற்ற ஜனங்களுக்குள்ளும் உள்ளது. அது உண்மை. புருஷர்களே, ஸ்திரிகளே நீங்கள் யாரென்று கண்டறிகின்ற நேரம் இதுதான். பிசாசு உங்களைப் பின்னாக மறைத்து வைத்து, உங்களை அச்சுறுத்தி நீங்கள் ஒரு சிறிய ஆள் என்று கூறுகிறான். அப்படி இல்லை. நீங்கள் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கிறீர்கள். தெய்வத்துவம் பரலோகத்தில் இல்லை! அது உங்களுக்குள் இருக்கிறது. அல்லேலூயா! நான் பைத்தியக்காரன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று எனக்குத்தெரியும். ஆனால் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லட்டும். சகோதரரே, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அழிவில்லாத ஜீவன் உனக்குள்ளாக ஜீவிக்கிறது என்று உணரும்போது, ''என் ஜீவனை நான் உனக்குக் கொடுக்கிறேன்". தேவனுடைய ஜீவன் மனிதனுக்குள் இருக்கிறது அதுதான் ஸோயி (zoe). 81. அவரே அங்கு நின்றார். அவரே எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர். அவரே ஜீவராசிகளை உருவாக்கினார்; தவளைகளையும், ஓ, தேனீக்களையும், வாத்துகளையும், கோழிகளையும், விலங்குகளையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். அவராலேயன்றி ஒன்றும் சிருஷ்டிக்கப் படவில்லை. அவர் யார்? தெய்வீகத் தன்மையாகிய கிறிஸ்து. எகிப்து நாட்களிலே வாதைகளும் அங்கு நடைபெற்ற எல்லாக் காரியங்களையும் கொண்டு வந்தது யார்? கிறிஸ்து. அவர் தான் சிங்கங்களின் வாய்களைக் கட்டினவர், அக்கினியின் உக்கிரத்தை அனைத்தவரும் அவரே. அவர்கள் பட்டயக் கருக்குகளுக்குத் தப்பினார்கள், அவர்கள் மரித்தோரை உயிரோடு எழுப்பினார்கள். இவைகளைச் செய்தது யார்? கிறிஸ்து. ஓ, அது எப்பேற்பட்டதாக இருக்கிறது? அவர் யார்? தெய்வீகத் தன்மையான கிறிஸ்துவே. 82. சகோதரரே, சகோதரிகளே, அந்த தெய்வீகத் தன்மை உங்களிலும் இருக்கிறது. "இன்னும் கொஞ்சம் காலத்தில் உலகம் என்னைக் காணாது, இருந்தாலும் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் காலத்தின் முடிவு பரியந்தம் உங்களோடும் உங்களுக்குள்ளும் இருப்பேன்". கிறிஸ்து இன்னும் தொழுவத்தில் இருக்கிறாரா? இல்லை, கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார். அல்லேலூயா! நாம் தொழுவத்தில் இருக்கும் கிறிஸ்துவை வழிபடவில்லை, ஆனால் உங்களுக்குள்ளாக இருக்கும் கிறிஸ்துவை; பரிசுத்த - ஆவியை ஆராதிக்கிறீர்கள். அவரே ஜீவனின் நம்பிக்கை (அல்லேலூயா) அவரே சிருஷ்டிகர். தேவன் தாமே மனிதருக்குள் வாசம் செய்கிறார். "நாம் எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை, ஆயினும் அவர் இருக்கும் வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்போம்". நாம் அவரைப்போல் ஆக்கப்படுவோம். மனிதருக்குள் ஆவியானவர் வாசம் செய்கிறார். 83. இப்போதோ அவர்கள் அவருக்கு இடத்தைக் கொடுக்கவில்லை. அவர்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள், அவர்களுடைய சபை கிறிஸ்து சபை, என்று இங்கே சுற்றிலும் உள்ள ஜனங்கள் கூறுகிறார்கள். ஆனால் நேற்று இரவு என்ன சம்பவித்தது தெரியுமா? அவர்களுடைய கிறிஸ்துமஸ் வெகுமதிகளைப் பிரித்தார்கள். அந்த கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் அநேக புருஷர்கள் நேற்று கூடிவந்து தகப்பனுடையது என்ன என்று பிரித்தபோது ஒரு பெரிய பீர் பெட்டி அங்கு ஓர் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இயேசுவுக்கோ இடமில்லை, எல்லாம் பீருக்கே! அம்மாவின் வெகுமதியைப் பிரித்தபோது, ஒரு சீட்டுக் கட்டு இருந்தது. கிறிஸ்துவுக்கோ இடமில்லை, சீட்டுக் கட்டுக்கே இருந்தது! அது சரியே. பிள்ளைகளுக்கு ஒரு சிறிய வேதாகமத்தையோ அல்லது அதுபோன்று ஏதாவது காரியத்திற்கு பதிலாக, "ஜீ - மென் புத்தகம்" அல்லது. அதுபோல புத்தகங்கள் இருந்தது. அங்கே இயேசுவுக்கோ இடமில்லை. சபைக்குச் செல்வதற்குப் பதிலாக அவர்கள் படங்களுக்கும் நடனத்திற்கும் எல்லாவற்றிற்கும் சென்று தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைக்கிறார்கள். 84. சகோதரனே, பரிசுத்த ஆவியினால் தேவனின் தெய்வீகத் தன்மை, மனித இருதயத்திற்கு வரும்போது, கிறிஸ்து சிருஷ்டிக்காத எதையும் அது உரைத்து அழைக்கும். அதுவே உண்மை என்று உங்களுக்குத் தெரியும். 85. ஓ, மகிமையின் நம்பிக்கையான தேவனே உனக்குள் இருக்கிறார். ஒரு தொட்டிலில் அல்ல, உனக்குள் இருக்கிறார். ஒரு சமயத்தில் அந்த விதமாகதான் இருந்தார். ஆதியில் இருந்த தேவன் பின்னர் மோசேக்குள்ளாக வந்தார். அவர் இஸ்ரவேலரின் புத்திரரிடத்திற்கு வந்தபோது தொட்டிலில் வந்தார். ஆனால் இன்றைக்கோ கிறிஸ்து உங்களுக்குள் இருக்க மக்கள் அவரை எங்கோ வரலாற்றுக்கு முன்னிருந்த காலங்களில் அவர் இருக்கிறதைப் போன்று அவரை ஆராதிக்கிறார்கள் இதோ அவர் இங்கே, இன்றைக்கு தேவனுடைய குமாரன் அசைவாடிக் கொண்டிருக்கிறார். அவருடைய மகத்தான சபை நகர்ந்து கொண்டிருக்கிறது. 86. ஆனால் சபைகள் இன்றைக்கோ சூப் இராப்போஜன விருந்துகளையும், பழம் (அ) மாமிசம் வேக வைத்த உணவு வகை விருந்துகளையும் கொண்டிருக்கிறார்கள், அதுமட்டுமல்ல எப்படி சிறந்த உடையை அணிந்து ஆடம்பரமாய் சபைக்கு போகிறது என்றும் பார்க்கிறார்கள். மகிமை. யார் சிறந்த சபையை பெற்றிருக்கிறது, யார் மிகச் சிறந்த இருக்கையை பெற்றிருக்கிறது, இதை வாசிக்க போவது யார், அதைச் செய்ய கூடியவர் யார்? என்று பார்க்கிறார்கள். ஓ, தேவனுக்கோ இடமில்லை, எல்லா வேளையிலும் ஜெபத்திற்குப் பதிலாக வேறு காரியத்தைச் செய்யும்படி கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் அவர்களால் ஜெபிக்க முடியவில்லை. வேறு காரியங்கள் செய்வதையே கொண்டவர்களாய் இருக்கிறார்கள், அவர்களால் இனிமேல் ஜெபிக்க முடியாது. அவர்களால் வழக்கமாக அன்பு கூர்ந்து தேவனை சேவிக்க முடியவில்லை. "சத்திரத்தில் அவருக்கு இடமில்லை." இந்த கடைசி காலத்திலே, நண்பர்களே, ''அவருக்கு சத்திரத்தில் இடமில்லை''. நிச்சயமாக அந்த தங்கும் விடுதி என்ன என்பது எனக்குத் தெரியும் ஆனால் நான் ''இந்த சத்திரத்தைக் குறிப்பிடுகிறேன்." 87. ஆனால் வேதத்தில் ''அந்த நாளிலே வாதுமை மரம் பூ பூத்து, மனிதனுடைய விருப்பங்கள் அற்றுப் போகும்; ஏனென்றால் மனுஷன் தன்னுடைய நித்திய வீட்டிற்கு போகிறதினாலே, துக்கம் கொண்டாடுகிறவன் வீதியிலே திரியாததற்கு முன்னும்; வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு ஊற்றின் அருகே சால் உடைந்துபோகும்". என்று கூறுகிறது. ஓ, இரக்கம், என் நண்பர்களே! 88. ஆனால் தீர்க்கதரிசி இதையும் கூட சொல்கிறார். சாயங்கால நேரத்திலே வெளிச்சம் உண்டாயிருக்கும் என்று அது உண்மை. மகிமைக்குச் செல்லும் பாதையை நீ நிச்சயம் கண்டடைவாய். அது சரியே இப்போது சாயங்கால நேரமானது வந்தாயிற்று. இப்போது நாம் கடந்து வந்த சபையானது ஒரு சமயம் அந்த சிறிய மாட்டுத் தொழுவத்தைப் போன்று உடுத்தியிருந்தது. இப்பொழுதோ சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையும், தெய்வீகத் தன்மையும், மனித வர்கத்துக்குள் ஜீவிக்கிறது என்பதை ஜனங்கள் உணர்ந்துக்கொள்ளும் நிலைமைக்கு சபை வந்துவிட்டது. 89. ஓ, சகோதர, சகோதரிகளே, இந்த காலை வேளையிலே நான் இயேசுவின் நாமத்தில் உங்களிடத்தில் பேசட்டும். இன்னும் நீங்கள் எனக்கு செவி கொடுக்கிறீர்களா? ஓ, என்னே, நான் ஒரு காரியத்தைக் கூறட்டும். 90. ஸ்திரீயும், புருஷனும் ஒரே மாதிரியாக இருக்கும் நேரமானது வந்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரே மாதிரி உடை உடுத்துவார்கள், இவர்களை வித்தியாசப்படுத்த முடியாது. அது உண்மை. இவை எல்லாம் நடைபெறும் என்று வேதம் கூறுகிறது. அது இங்கே இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். அது உண்மை தானா? அவர்களுக்கும் தெரியும் அது உண்மை தானா? அது உண்மைதான். அவர்கள் ஒரேவிதமாக நடந்துக் கொள்கிறார்கள். பார்ப்பதற்கு ஒரே விதமாய் இருப்பார்கள். ஒரேவிதமாய் சபிப்பார்கள். ஒரே விதமாய் பேசுகிறார்கள். அது அந்த விதமாகத்தான் இருக்கும் என்று வேதம் கூறுகிறது. ''கடைசி நாட்களில் கொடிய காலம் வரும். மனுஷன் தேவபிரியராய் இல்லாமல் தற்பிரியராயும், இணங்காதவராயும், அவதூறு செய்பவராயும் இருப்பார்கள்" என்று அவர் கூறுகிறார். அது இங்கே இருக்கிறதா? அது உண்மை. 91. ஓ, தேவனுக்கே மகிமை! என் ஆத்துமாவுக்குள் ஏதோ ஒன்று உருண்டோடுகிறதை உணருகிறேன். ஓ நான் வெளியே நோக்கிப்பார்க்கும் போது, அது பயங்கரமாயுள்ளது. "நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் இருக்கும்". அந்நாளிலே நோவா சில உண்மையுள்ளவர்களை உடையவராய் இருந்தார். தேவனும் இந்நாளிலே உண்மையுள்ள சிலரை உடையவராய் இருக்கிறார். இந்த மகத்தான நாடக அமைப்பின் நேரம் வந்து கொண்டிருக்கிறது. 92. புருஷர்களே, ஸ்திரீகளே, பரிசுத்த ஆவி உங்களில் வாசம் செய்தால், ஆயிரத்தொள்ளாயிரம் வருடம் முன் பிறந்த கிறிஸ்து மனிதனுக்குள் வந்துவிட்டார் என்பதாகும். அவர் ஒருபோதும் தொட்டிலிலே இருந்துவிடவில்லை. 93. இன்றைய தினம் அவர் பிறந்த நினைவாக அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? ஏதோ ஒரு மரத்தை எடுத்து வந்து அதை சிதைத்து அதிலிருந்து குழந்தைகளுக்காக ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை செய்கிறார்கள். அப்படி செய்து அவர்கள்..... அது பரவாயில்லை. நான் அதற்கு விரோதமாய் பேசவில்லை. காரியம் என்னவென்றால், அவர்கள் கிறிஸ்துவுக்கு அதிகம் செய்வதைக் காட்டிலும் கிறிஸ்துமஸ் மரத்திற்குச் செய்கிறார்கள். 94. கிறிஸ் கிறிங்கிலி (Kris kringle) என்பவர் தேசம் முழுவதுமாய் நிறைந்திருக்கிறார். அவர் யார்? அவர் ஒரு ஜெர்மானியர். அநேக வருடத்திற்கு முன்பு அவர் ஒரு கத்தோலிக்க பரிசுத்தவானாக இருந்து வந்தவர். ஒரு வயதான மனிதனாக அநேகருக்கு நல்லது செய்து கொண்டிருந்தவர். இன்றைக்கோ அது கிட்டத்தட்ட ஆராதனையாகவே ஆகிவிட்டது. அது சரியே. சிறு பிள்ளைகளுக்கு நீங்கள் அதைக் கூறுவது அல்லது நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ என்னை பொருத்தவரை அது பரவாயில்லை. ஆனால் அதன் காரியம் என்னவென்றால், அந்த வழியில் அந்த பாதையில் விழுவதினால் கிறிஸ்துமஸில் உள்ள கிறிஸ்துவையும், கிறிஸ்துவின் அடிப்படைக் கொள்கைகளையும் வெளியே தள்ளுவது மிக சுலபமாக மாறிவிடும். மனிதன் உண்மையான கிறிஸ்துமஸை எடுப்பதற்கு பதிலாக கிறிஸ்கிறிங்கிலை எடுத்துக் கொள்கிறான். அது சரியே, "விடுதியிலே அவருக்கு இடமில்லை". 95. இவையெல்லாம் குறித்து வைத்திருக்கிறேன். நமக்கு மட்டும் நேரம் இருக்குமானால் நலமாயிருக்கும். நேரம் ஆகிறது என்று எனக்குத் தெரியும், நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது. 96. ஆனால் பாருங்கள் நண்பர்களே, தேவனின் மகத்தான நாடகமானது நமக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கிற வேளையானது இப்போது வந்திருக்கிறது. தொட்டிலில் இருந்த தேவ குமாரன் இப்பொழுது இருதயத்தில் இருக்கிறார். அவரே தேவனின் தெய்வீகத் தன்மை. அவரே கர்த்தராகிய சிருஷ்டி தேவன். அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவரால் உண்டாக்கப்பட்டது, ஆனால் உலகமோ அவரை அறியவில்லை என்றார். 97. இன்றைக்கு சபையின் காரியம் அந்த விதமாகத்தான் இருக்கிறது. மகிமையின் நம்பிக்கையாகிய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஜனங்களின் இருதயத்திற்குள் வந்துவிட்டது. ஆனால் அவர்களோ அது என்னவென்று இணங்கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். அது ஏதோ சபையை சேர்ந்து கொள்ளுதல் அல்லது அது போன்று இருத்தல் என்று நினைக்கிறார்கள். 98. ஆனால் அந்த சிருஷ்டி கர்த்தராகிய தேவன் உனக்குள் ஜீவித்துக்கொண்டு, உனக்கு எல்லா அதிகாரங்களையும் கொடுக்கிறார். அவர் கொண்டிருந்த யாவற்றையும் நீ சுதந்தரித்துக் கொள்ளும்படியான நிலையில் இருக்கிறாய். ஆகையால் உன்னைத் தீமையிலிருந்து விலகிக் கொள்ளவும், நன்மையானதை செய்யவும், தீமையைத் தவிர்க்கவும், நீதியினன்டைக்கு ஓடிப்போகவும், சோதனையிலிருந்து விலகி இருக்கதக்க அது உனக்குள் இருக்கிறது. ஆகவே எல்லா துர்குணம், பகை, வாக்குவாதம், பொறாமை, முதலானவையிலிருந்து விலகி இருங்கள். ஏனென்றால் அது அவரை உங்களுடைய இருதயத்திலிருந்து எடுத்துப் போடும். நீங்கள் அவரை ஏற்றுக் கொண்டால் அவரை அணைத்துக் கொண்டு அவரை நேசித்து உங்களுடைய இருதயத்தில் வைத்து அவரை அன்பு கூறுங்கள். அந்த விதமான வல்லமையில் சபை ஒன்று சேர்ந்திருக்குமானால் அதனால் வானங்களைக் கட்டவும், வியாதியஸ்தரை சுகப்படுத்தவும், குருடரின் கண்களைத் திறக்கவும் (அல்லேலூயா) ஊமையைப் பேசவும், செவிடரை கேட்கவும், முடவரை நடக்கவும், குருடரை காணவும் செய்யதக்கதான வல்லமையை உடையதாய் இருக்கும். ஏன் தெரியுமா? அது உங்கள் இருதயத்திலுள்ள சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையை இனங்கண்டு கொள்ளுகிறது. அவரே தெய்வீகத் தன்மையாக இருக்கிறார். 99. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அற்புதமான கிருபை, எவ்வளவு இனிமையாய் ஒலிக்கிறது, என்னைப் போல நிர்பாக்கியம் உள்ளவனை அது இரட்சித்தது! ஒரு சமயம் நான்காணப்படாமல் இருந்தேன், ஆனால் இப்பொழுதோ கண்டுபிடிக்கப்பட்டேன், ஒரு சமயம் நான் குருடனாய் இருந்தேன், ஆனால் இப்போதோ காண்கிறேன். என்று ஒரு கவிஞன் கூறி இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. 100. அன்பான சகோதரனே, சகோதரியே நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறாமல் இருப்பீர்களானால் இந்த காலையில் உங்களால் முடிந்தமட்டும் துரிதமாய் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் ஓடுங்கள். இது முத்தரிக்கிற நேரமாய் இருக்கிறது. சத்துரு வெள்ளம் போல் வந்திருக்கிறான்; அவரோ அதற்கு எதிராக கொடியை ஏற்றிக் கொண்டிருக்கிறார். நாடகம் தயாராகிவிட்டது. சபையானது வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கிறது. இது மற்ற காரியங்களைப்போன்று நிச்சயமானதாய் இருக்கிறது. நண்பனே, நீ இனிமேல் காலதாமதப்படுவதற்கு உனக்கு நேரம் இல்லை. நான் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வேன் - என்று காத்துக் கொண்டிருக்கவும் நேரம் உனக்கில்லை. நீ இப்பொழுதே வா. நீ இன்றைய தினமே அதை செய்வது உனக்கு நல்லது. அது சரியே. இன்றைக்கு நேரமிருக்கும் போது ஆதாயப்படுத்திக்கொள் இப்போதே அதைச் செய். 101. நினைவில் இருக்கட்டும் நண்பர்களே இது பார்ப்பதற்கு ஒருக்கால் வினோதமாக காணப்படலாம். உலகம் ஒருபோதும்.... கிறிஸ்துவின் மார்க்கம் ஒருபோதும் பிரசித்திப்பட்டதாயிருந்ததில்லை. தேவனுடைய வழிகள் எப்போதுமே பிரசித்தியற்றதாக இருந்தது. ஏனென்றால் சாத்தான் வானமண்டலத்தின் அதிகாரத்தின் பிரபுவாய் இருக்கிறான். எல்லா அரசாங்கங்களையும் அவன் உடையவனாய் இருக்கிறான். வேதாகமத்தின்படியாக எல்லா அரசாங்கமும் பிசாசினால் கட்டுப்பட்டிருக்கிறது. பிசாசும் அந்த விதமாகவே கூறி இருக்கிறான். அது சரிதான். அவன் எல்லா அரசாங்கங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறான். 102. மேலும் வேதம், பரிசுத்த தூதர்களே பூமியின் பரிசுத்தவான்களே, ''களிகூறுங்கள், ஏனென்றால் உலகத்தின் இராஜ்ஜியம் தேவனுக்கும், நம்முடைய கிறிஸ்துவுக்குமான இராஜ்ஜியங்களாக ஆகிவிட்டன, அவர் அரசாளுவார்", என்று கூறுகிறது. 103. சாத்தான் மலையின் உச்சிக்கு இயேசுவானவரை கொண்டுபோய் உலகத்தின் இராஜ்யங்களை எல்லாம் காண்பித்து, "இவைகளெல்லாம் என்னுடையவைகள், நான் உமக்குக் கொடுக்கிறேன் என்றான்". 104. இயேசுவானவரோ, "அப்பாலே போ சாத்தானே" என்றார். அது சரி. அவர் அதில் அக்கரை கொள்ளவில்லை.... 105. அதற்கு அவர் "என்னுடைய இராஜ்ஜியம் இந்த உலகத்துக் குரியதானால் நான் லேகியோனுக்கும் அதிகமான தூதர்களை அழைத்திருப்பேன்; ஆனால் என்னுடைய இராஜ்ஜியமோ "இந்த உலகத்துக்குரியது அல்ல, என்னுடைய இராஜ்ஜியம் பரலோகத்தில் இருக்கிறது" என்றார். 106. அதற்கு அவர், "தேவனுடைய இராஜ்ஜியம் உங்களுக்குள்ளாக இருக்கிறது", என்று கூறினார். ஆகையால் லேகியோனும், வல்லமைகளும், பரிசுத்த தூதனின் ஒத்தாசையும் (அல்லேலூயா) இந்த காலையில் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை மூலம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினாலும் உங்களுக்குள்ளாக இருக்கிறது. ஆம் ஐயா. 107. இன்று காலையில் நீங்கள் யார்? கிறிஸ்து இயேசு யார்? 'நீங்கள் எந்த அளவிற்கு அவரை உள்ளே இருக்கும்படி அனுமதிக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர் உங்களுக்குள்ளாக இருக்கின்றார்' அவர் உனக்குள்ளாக பிரவேசிக்க தன்னை அழுத்திக்கொண்டு முயற்சிக்கிறார். இன்றைக்கு உனக்குள்ளாக அசைவாட விரும்புகிறார். நீயோ விலகி நின்று ஆச்சரியப்பட்டு, பார்த்து, கூர்ந்து நோக்கி சிறிது தாமதிக்கிறாய். அப்படி செய்யாதீர்கள். முன்னோக்கி நேராக அவருடைய உள்ளத்திற்குள் செல்லுங்கள். அந்த வேளை இப்பொழுது வந்திருக்கிறது. அல்லேலூயா! 108. ஓ, எப்படியாய் நான் அவரை நேசிக்கிறேன், அவர் இந்நாள் ஒன்றில் வரப்போகிறார். நான் அவரைக் காணவிரும்புகிறேன். நீங்கள் விரும்பவில்லையா? நான் அவரைக் காண விரும்புகிறேன். நாம் அவரை காண்போம் என நம்புகிறேன். நீங்கள் விசுவாசிக்கவில்லையா? அவர் இங்கே இருக்கிறார். அவருடைய வல்லமை உலாவிக் கொண்டிருக்கிறது. 109. எந்தக் காரியம் மக்களை கூச்சலிடவும், அழவும், தொடர்ந்து போய்க் கொண்டு இருக்கவும் செய்கிறது? அப்படிச் செய்ய வைப்பது எது? பரிசுத்த ஆவி அவர்களுக்குள் அசைவாடுகிறதே காரணம். அவர்களால் மட்டும் உணர்ந்து கொண்டு அவரை அணைத்துக்கொள்ள முடிந்தால் நலமாய் இருக்கும். பரிசுத்த ஆவியை தழுவிக்கொண்டு, விசுவாசித்து, அவரை உங்களுடைய மார்போடு அணைத்துக் கொள்ளுங்கள். சரியாய் ஜீவியுங்கள். அவரை தடை செய்யக்கூடிய ஒன்றையும் செய்யாதிருங்கள். "ஓ கர்த்தராகிய இயேசுவே நீர் எனக்கு வேண்டும். நீர் என் பட்சத்தில் இருக்கும்படியாக நான் விரும்புகிறேன். பிதாவே நான் உமது பட்சத்தில் நிற்கப் போகிறேன்" என்று கூறுங்கள். நீங்கள் அதை செய்யும் வேளையில் அவர் உந்தித்தள்ளி உனக்குள் வருவார். அவர் உள்ளே இருக்க விரும்புகிறார். அவரண்டை சேரும்படி அவர் எந்நேரமும் உன்னை கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறார். 110. இப்போது நண்பர்களே, அது உண்மை என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஜனங்கள் நீங்கள் யாரென்று உணர்ந்து கொள்வதில்லை என்று நான் அறிவேன்? இங்கே இருக்கும் ஒவ்வொரு நபரும் பாவத்திற்கு மேலாகவும், பாவம் இல்லாமல், தேவனுக்குள் ஜீவிக்க முடியும். நீங்கள் தவறு செய்வீர்கள்; ஆனால் கிறிஸ்துவின் இரத்தம் உங்களை மன்னிக்கும். ''பிதாவே, இவர்களை மன்னியும், ஏனென்றால் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாது இருக்கிறார்கள்". அது சரிதானே? கல்வாரியின் சிலுவையில் தொங்கின அதே கிறிஸ்துவின் வல்லமை மற்றும் உயிர்தெழுதலின் நாளிலே அவரை உயிரோடு எழும்பப்பண்ணின அதே தேவனின் வல்லமை இன்று பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களுக்குள்ளாக இருக்கிறது. ஓ, நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? ஓ, என்னே, அவருடைய சத்தம் இன்றைக்கும் அழைக்கிறது. அதற்கு செவிகொடுங்கள். 111. உங்களுடைய மார்போடு அவரை நெருக்கமாக அணைத்து அல்லது உங்களுடைய மார்புக்குள்ளாய் நெருக்கி அணைத்துக் கொண்டு "கர்த்தராகிய இயேசுவே, நான் சற்று வித்தியாசமாகவே இருந்து வந்தேன், இந்த கிறிஸ்துமஸ் நாள் முதற்கொண்டு நீர் யார் என்று உணர்ந்து கொண்டேன். ஒரு சமயம் உம்மை தொழுவத்தில் இருக்கும் ஒரு சிறு குழந்தையாய் ஆராதித்தேன். ஆயிரத்துத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீர் ஒரு சிறு குழந்தையாய் வந்திருந்ததைக் காணும்போது, ஓ, நான் இப்பொழுது எருசலேமுக்கு போயிருந்தால் நலமாக இருக்குமே என்று நான் நினைத்தேன்", என்று சொல்லுங்கள். 112. இன்றைக்கு அவர்கள் அந்த தொட்டிலண்டைக்கு போகவும் அவர் பிறந்த அந்த தொழுவத்திற்குப் பிரயாணப்பட்டு போவதற்கான பயணச்சீட்டு போன்றவற்றை எடுக்கிறார்கள். ஆனால் நண்பர்களே அவர் பிறந்தது அங்கே இல்லை. அவர் பிறந்தது சரியாக இங்கே தான். தேவன் அவரை இங்கே கீழே நம் ஒவ்வொருவருக்குள்ளாகவும் கொண்டு வந்தார். அவருடைய ஜீவன் நமக்குள்ளே ஜீவித்துக் கொண்டிருக்கிறது. ஓ, உலகத்தை சிருஷ்டித்தவரும், வானங்களை சிருஷ்டித்தவரும், பூமியை சிருஷ்டித்தவரும், மனிதனை சிருஷ்டித்தவருமான சிருஷ்டி கர்த்தர் இன்று பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற ஒவ்வொருவருக் குள்ளாகவும் சரியாக இருக்கிறார். அதுதான் காரியம். அதுதான் இரகசியம். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் உங்களுக்குள்ளாக இருக்கிறார். அவரே மகிமையின் நம்பிக்கை. 113. இங்கே பழைய ஏற்பாட்டில் பார்ப்பீர்கள் என்றால் (நான் அதை பலமுறை குறிப்பிட்டு இருக்கிறேன்) ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, அது மரித்த மிருகத்தின் சரீரத்தை இரண்டாக கிழிக்கப்பட்டதின் மேல் செய்யப்பட்டதாய் இருந்தது. அந்த இரண்டு ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தமும் ஒன்றாகச் சேர்ந்து வரவேண்டும், அந்த ஒப்பந்தம் ஒன்றோடு ஒன்று பொருத்தமாக அமைய வேண்டும். 114. இன்றைக்கு தேவன் ஒரு ஒப்பந்தத்தை செய்திருக்கிறார். நீங்கள் நல்லவர்கள் என்ற காரணத்தினால் அல்ல. நீங்கள் ஒரு சபையை சேர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற காரணத்தினால் அல்ல. சமுதாயத்தில் நீங்கள் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்ற காரணத்தினால் அல்ல. நீங்கள் எப்போதுமே மிகுந்த நல்லவர்களாய் இருக்கலாம்; நீங்கள் ஒரு சுத்தமான ஜீவியத்தை ஜீவிக்கலாம்; நீங்கள் எல்லா நாளும் சபைக்கு போகலாம்; நீங்கள் ஒவ்வொரு நாளும் பலி செலுத்தலாம், உங்களுடைய பணத்தில் ஒரு பகுதியைக் கொடுக்கலாம்; உலகத்தின் எல்லாப் பாவங்களையும் எல்லாக் காரியங்களையும் விட்டுவிடலாம்; உங்களால் முடிந்த அளவு உண்மையாயும் உத்தமமாயும் இருக்கலாம்; அப்படியிருந்தும் கிழக்கிலிருந்து மேற்கு எவ்வளவு தூரமாய் இருக்கிறதோ அவ்வளவாய் நீங்கள் பரலோகத்தை தவறவிடலாம். அது சரியே. நாம் நம்முடைய நன்மைகளால் இரட்சிக்கப்படவில்லை; ஆனால் அவருடைய இரக்கத்தினால் நாம் வாங்கப்பட்டவர்களாய் இருக்கிறோம். தேவன் நம்மை குமாரரும் குமாரத்தியுமாக ஆக்க விரும்புகிறார். நன்மைகளால் அதை ஒருபோதும் செய்யமுடியாது. தேவனுடைய ஆவியே அவைகளைச் செய்கிறது. அது அப்படியாக இல்லை என்றால் அவர் பரிசுத்த ஆவியை அனுப்ப வேண்டியதில்லையே! 115. பரிசுத்த ஆவி எப்படி முழுமை அடைய முடியும் என்றால்... அந்த ஒப்பந்தம் எப்படி முழுமையடைய முடியும்? "நான் போகிறேன், இருந்தாலும் நான் திரும்பி வந்து உங்களோடு இருப்பேன்; உங்களுக்குள்ளாகவும் இருப்பேன். பிதாவினிடம் வேண்டிக்கொள்ளுங்கள்; அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பார். அவர் உங்களோடு என்றென்றைக்கும் இருப்பார்" என்று இயேசு சொன்னாரே. 116. மக்கள் அவர்களுடைய பெயர்களை சபை புத்தகங்களில் பதிவிட்டு, கிறிஸ்துமஸ் நாளன்று ஒரு புதிய பக்கத்தை திருப்ப முயற்சித்து, சபைக்குப் போய் அப்போதிருந்த அந்த தொழுவதிற்கு அஞ்சலி செலுத்த முயற்சிக்கிறார்கள். பரிசுத்த ஆவியோ எல்லா இடங்களிலும் உந்தித் தள்ளிக்கொண்டு உள்ளே பிரவேசிக்கும் இடத்தைக் கண்டு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்களோ அங்கே சென்று "ஓ, அவர்கள் ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள்" என்று கூறும் அளவிற்கு உலகம் அவர்களுடைய கண்களை குருடாக்கினது. சரியாக நோவாவின் நாட்களில் இருந்ததுப் போலவே இந்த நாட்களிலும் இருக்கிறது. 117. தேவ குமாரனின் வருகை மிக சமீபமாய் இருக்கிறது. அது சரியே. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் மட்டுமே, அதாவது அழிவில்லாத ஜீவனை கொண்டிருக்கிறவர்கள், பரிசுத்த ஆவியை அவர்களுக்குள்ளாக உடையவர்கள் மட்டுமே இங்கிருந்து இழுத்துக் கொள்ளப்படுவார்கள். அது அவ்வளவு நிச்சயமாக இருக்கிறது. 118. நோவாவின் நாட்களில் தண்ணீரின் மேலிருந்த அந்த சிறு படகை குறித்து இன்னொரு ஒரு காரியம் இருக்கிறது. அது உன்னதத்திலிருந்து வல்லமையை இழுத்துக் கொண்டதாய் இருந்தது. அதின் மேல் ஒரு வெளிச்சம் உண்டாயிருந்தது. அதுதான் தேவனுடைய மகிமையை பரத்திலிருந்து அந்த மேல் அறையின் மேல் பிரகாசிக்கச் செய்தது. 119. நண்பர்களே, நான் இன்றைக்கு கூறுகிற என்னுடைய வார்த்தையைக் கேளுங்கள். அதை இழுக்ககூடிய வல்லமை சபையிலிருந்து அல்ல, போதகரிடத்திலிருந்து அல்ல, ஆனால் மகிமையிலிருந்து வருகிறது. ஒரு சபையை இழுக்கும்படியாய் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் சரியான வழியில் இருக்கிறது. என்ன சொல்ல வருகிறீர்கள்? அதுதான் "ஸோயி" அவருடைய ஜீவனை அடையத்தக்க வழியாக இருக்கிறது, அதுதான் தேவனுடைய வல்லமை. 120. "நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைக் காட்டிலும் அதிகமான கிரியைகளை செய்வீர்கள்" என்றார். அவர் துன்பப்படுத்தப்பட்டார், பார்த்து சிரிக்கப்படப்பட்டார், கேலி செய்யப்பட்டார், மரித்தார், பாதாளத்திற்குள் சென்றார், ஆனால் அவர் உண்மையுள்ளவராய் இருந்தார்; அவருக்குள்ளாக தேவனுடைய ஆவியை உடையவராய் இருந்தார். தேவன் அவரை உயிரோடே எழுப்பினார். நாமும் அதே வழியில் சென்றால் நாமும் உயிரோடே எழும்பி வருவோம். ஓ, அல்லேலூயா, நான் அவரை நேசிக்கிறேன். 121. நீங்கள் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் அவரை நேசிக்கிறீர்களா? அவர் அருமையானவர் அல்லவா? ஓ, அது மகத்தானது. தேவனுடைய வார்த்தையில் எழுதி வைக்கப்பட்டதை கண்கள் கண்டது, காதுகள் கேட்டது, அவர் அற்புதர், ஆச்சரியமானவர், அல்லவா! நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. 122. பரலோக பிதாவே, ஓ, இயேசுவே, நான் ஒரு மகத்தான மணி வேளைக்காக எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த நேரம் வந்து கொண்டிக்கிறதைக் காண்கிறேன். வேறு எந்த இடத்திலும் நம்பிக்கை இருக்கிறதாக காணமுடியவில்லை. காலம் கடந்து போகிறதைக் காண்கிறேன். அந்த மிகப்பெரிய கம்யூனிசத்தின் சிவப்பு வெளிச்சமானது பூமியின் மேல் முழுவதுமாய் சுற்றிக் கொண்டிருக்கிறதைக் காண்கிறேன். சம்பிரதாய சபைகளும் உம்முடைய சபைக்கு எதிராக தங்கள் நிலையை எடுத்துக் கொண்டு ''தெய்வீக சுகமளித்தல் தவறானது, அது ஒரு கூட்ட மதவெறியர்கள்". எங்கள் வெள்ளை மாளிகையிலே அதைத் தடை செய்வதற்கான மசோதா இருக்கிறது, என்கிறார்கள். 123. ஓ, ஆனால் அந்நாளில் தேவன் அங்கே உட்கார்ந்து அந்த பரிசுத்தமான ஜனங்களைப் பார்த்தபோது அவர்கள் எல்லாரும் தேவனுடைய வல்லமையால் மெருகேற்றப்பட்டவர்களாய் அவர்களுடைய முகங்களைப் பார்க்கும்போது அவர்கள் தேவனுடைய மகிமையைக் கண்டவர்களாய் இருந்தார்கள். அக்கினி சூளையண்டை இருந்த அந்த எபிரெய பிள்ளைகளைப் போன்று அவர்களால் இருக்க முடிந்தது. நாங்கள் ஒருபோதும் தலை வணங்கமாட்டோம், இல்லை. எங்களுடைய தேவன் எங்களை விடுவிக்க வல்லவராய் இருக்கிறார், கர்த்தராகிய இயேசுவே நீர் துரிதமாய் வருவீராக. 124. இப்பொழுது நாங்கள் இருக்கின்ற நேரம் மிகவும் கொடியதாயிருக்கிறது. மக்கள் தேவ பக்தியின் வேஷத்தை தரித்து, அதன் வல்லமையை மறுதலிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகியிருப்பாயாக என்றீர். கடைசி நாட்களுக்காக ஆவியானவர் பேசுவார் என்று சொன்னீரே. இதோ நாங்கள் அந்த நாட்களில் தான் இருக்கிறோம். 125. கர்த்தாவே, இதோ எங்களுடைய சிறு சபையானது இங்கே இருக்கிறது. உம்மை நேசிக்கிற புருஷர்களும் ஸ்திரீகளும் இங்கே இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். தேவனே, கடந்து போன நாட்களில் அநேகருடைய இருதயத்தை நிரப்பிய அந்த ஆவியானது இன்னும் ஆழமாக அனேக இருதயத்துக்குள் வரும்படி ஜெபிக்கிறேன். அவர்கள் தாமே எல்லா துர்குணத்தையும், சண்டைகளையும், உமக்கு விருப்பமில்லாத எல்லா காரியங்களையும் ஒழித்துவிட்டு இன்றைக்கு தொடர்ந்து முன்னோக்கிப் போவார்களாக. மாட்டுத் தொழுவத்தை நோக்கி அல்ல; ஆனால் கல்வாரியை நோக்கி செல்வார்களாக. எல்லாம் சேர்ந்து கல்வாரி மலைக்கு அல்ல; ஆனால் மகிமையின் நம்பிக்கையாகிய கிறிஸ்துவிடம், தேவனின் தெய்வீகத் தன்மையண்டைக்கே செல்வார்களாக. அவரே தேவனுடைய மகத்துவமும் தேவனுடைய வல்லமையுமாய் எங்களுடைய இருதயங்களில் இருந்து உலகத்தின் காரியத்திலிருந்து எங்களை வெளியே இழுக்க முயற்சிக்கிறார். ஏனெனில், அதினால் மாத்திரமே அவர் எங்களை இந்த பூமியிலிருந்து ஒரு நாளில் வெளியே எடுத்து ஒரு மேலான தேசத்திற்கு கொண்டு போகமுடியும். தேவனே இதை இன்றைக்கு அருளும். உம்முடைய ஊழியக்காரனின் ஜெபத்தைக் கேட்டு ஜனங்களிடம் பேசுவீராக. 126. இந்த காலையிலே இங்கே யாராவது இழக்கப்பட்டவராய் பரிசுத்த ஆவி இல்லாமல் இருந்தால் அவர்கள் தாமே உம்மை பெற்றுக் கொள்வார்களாக. இதை அளியும், அன்புள்ள தேவனே, இதை உம்முடைய நேச குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். அவர் தாமே ஆயிரத்துத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தொழுவத்தில் பிறந்து, முப்பத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்து எங்களுடைய பாவங்களுக்காக கல்வாரியிலே வேதனைப்பட்டு, பின்னர் நாற்பது நாள் கழித்து உன்னதத்திற்கு ஏறி, மகிமையில் ஏற்றுக் கொள்ளப்பட்டார். மறுபடியும் பத்து நாட்கள் கழித்து பரிசுத்த ஆவியின் வல்லமையில் வந்து இப்போது சபையிலே ஜீவித்துக் கொண்டிருக்கிறார். வெகுசீக்கிரத்தில், அவரை உயிரோடு எழுப்பின அதே வல்லமையானது இங்கிருந்து கொண்டு செல்லும்படியாக பரிசுத்த ஆவியாக சபைக்குள்ளாக ஜீவிக்கிறது. ஓ, தேவனே, நீர் வாரும், நீர் வந்து சபையை இரட்சிப்பீரா? இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 127. உங்களுடைய தலைகள் வணங்கியிருக்கும் வேளையில், "இன்றைக்கு அழைக்கிறார்" என்ற பாடலை பாடப்போகிறோம். இங்கே கிறிஸ்து இல்லாமல் எவராகிலும் இருப்பீர்களானால்; அதாவது தேவன் இல்லாமல், எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருப்பீர்களானால் நீங்கள் இங்கே வருவீர்களா? இன்றைக்கு அழைக்கிறார்! இன்றைக்கு அழைக்கிறார்! இயேசு அழைக்கிறார், அவர் மென்மையாக இன்று அழைக்கிறார். இயேசு மென்மையாய் இன்று அழைக்கிறார், இன்றைக்கு அழைக்கிறார். 128. நீங்கள் தேவன் இல்லாமல் இருக்கிறீர்களா, நம்பிக்கை இல்லாமல், கிறிஸ்து இல்லாமல் இருக்கிறீர்களா? ஓ! கிறிஸ்தவனே தேவ வார்த்தையின் முழு ஜீவியத்தை இன்னும் பெறாமல் இருப்பாய் என்றால், நீ இங்கே வரமாட்டாயா? அவர் இன்றைக்கு அழைக்கிறார்! இன்றைக்கு அழைக்கிறார்! இயேசு இன்றைக்கு அழைக்கிறார் அவர் மென்மையாய் அழைக்கிறார் இன்றைக்கு. 129. கவனியுங்கள் நீங்கள் இரட்சிக்கப்படாமல் இருப்பீர்களானால், பிதாவானவர் உங்களை இரட்சிக்கும்படி இங்கே இருக்கிறார். நான் உங்களை அறியேன். ஆனால் கவனியுங்கள் நண்பர்களே; நீங்கள் இங்கே நிற்கிற வேளையிலே, இந்த காலை வேளையில் உங்களுக்கு ஏதாவது ஒரு காரியம் செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். உங்களுடைய கண்கள் மூடி இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இங்கே இருக்கிற இந்த திரையை சற்று இறக்கி அதோ அங்கே அந்த இடத்தை நீங்கள் சற்று பார்க்கும்படி செய்ய விரும்புகிறேன். இப்பொழுது இவர்கள் இந்த பாடலை இசைத்துக் கொண்டிருக்க நாம் இந்த காலை வேளையில் அந்த இடத்தை சற்று விஜயம் செய்யப் போகிறோம். இந்த கூடாரத்தில் அமர்ந்திருக்கும் வாலிபரும் முதிர்வயதுள்ளோரும் மற்றும் எல்லாருக்காகவும் இந்த திரையைக் கீழே இழுக்கப்போகிறேன். 130. இந்த காலையில் சிறிது நேரம் பாதாளத்தின் நுழைவாயிலை சற்று நோக்கிப் பார்க்கப் போகிறேன். அங்கே கீழே இருக்கிறவர்களுக்கு இங்கு மேலே இது கிறிஸ்துமஸ் நேரம் என்பது தெரியும். கிறிஸ்துமஸ் நேரத்தில் மக்கள் என்ன செய்வார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். சிலர் குடித்தும், சிலர் சுற்றித் திரிந்தும், சிலர் சபைக்குச் சென்றும், சிலர் பரிகாசம் செய்தும், சிலர் கேலி செய்தும் இருக்கின்றனர் என்று தெரியும். இப்பொழுது எலும்புக் கூடுகளாக மாற்றக்கூடிய காரியம் ஒருவேளை இந்த சபையின் வாசல் வழியாய் இந்த காலையில் வந்தால் எப்படி இருக்கும்? யாருக்குத் தெரியும், அடுத்த கிறிஸ்துமஸ் அன்று ஒருவேளை நீ அங்கே இருக்கலாம். அல்லது அடுத்த கிறிஸ்துமஸுக்குள்ளாக ஒரு வருடம் கழிந்தவனாகவும் அங்கே இருக்க கூடும். 131. ஆனால் ஒன்றை நினைவில் கொண்டிருங்கள். நீங்கள் ஆத்துமாக்களோடு இடைப்படுகிறீர்கள். நீங்கள் ஆவிக்குரிய காரியங்களோடு இடைப்படுகிறீர்கள். ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் நியாயத்தீர்ப்பு நாளன்று பதில் கூறவேண்டும். என்னால் உத்தமமாய் சொல்ல மாத்திரமே முடியும். இந்த காலையில் நீங்கள் கிறிஸ்துவைப் பெறாமல் இருப்பீர்களானால்; அவர் திறக்கப்பட்ட வாசலிலே நின்று கொண்டிருக்கிறார் என்பதை மாத்திரம் என்னால் கூற முடியும். நீங்கள் அவரை நீசமாக நடத்துகிறீர்களா? பரிசுத்த ஆவியைப் பெற்ற மக்களே நீங்கள் இதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அதனோடு என்ன செய்கிறீர்களோ அதைக் கொண்டு நியாயம் தீர்க்கப்படுவீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியின் மூலம் ஒருக்கால் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனாலும், நீங்கள் ஆக்கினைக்குள்ளாவீர்கள். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சரீரத்திற்குள்ளாக என்னென்ன செய்தானோ அதற்கேற்றாற்போல் நியாயம் தீர்க்கப்படுவான். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற பின்பு அதைக் கொண்டு என்ன செய்தீர்கள்? உங்களுடைய அயலானைக் குறித்து நீங்கள் பேசினீர்களா? நீங்கள் தவறான காரியத்தைச் செய்திருக்கிறீர்களா? நீங்கள் இவைகளை உடையவராய் இருந்தால் நினைவிருக்கட்டும்; நான் ஜீவியத்தை இப்போதே புதியதாக துவக்குவேன் என்று கூறுங்கள். "தேவனாகிய இயேசுவே இன்றே, இப்போதிலிருந்து நீர் என்னை என்னவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீரோ அதுவாக இருக்கப் போகிறேன். ஆகவே தேவனுடைய அழிவில்லாத பாகமும், தேவனுடைய ஆவியும் என்னுடைய சரீரத்திற்குள் ஜீவிக்கிறதென்று நான் உணருகிறேன். இப்பொழுது நான் தவறாக இருந்தால் நீர் என்னை மன்னியும். நான் உம்மண்டை வர விரும்புகிறேன். நான் இன்னும் சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன்", என்று கூறுங்கள். 132. இந்த காலை வேளையில் அப்படியே இருந்தவாறு அவரை நிரூபியுங்கள். அப்படியே உங்கள் கரங்களை உயர்த்திக் கொண்டிருங்கள். பின்னாக இருக்கிறவர்களே சற்று எனக்காகச் செய்யுங்கள். "சகோ. பிரான்ஹாம் இன்றையிலிருந்து நான் புதிதாக துவங்க விரும்புகிறேன்" என கூறுங்கள். நான் என்னுடைய கரத்தையும் உயர்த்தி இருக்கிறேன். நான் புதியதாக தொடங்கப் போகிறேன். நான் இதுவரை அவருக்கு செய்ததைக் காட்டிலும் இன்னும் அதிகமாய்ச் செய்யப்போகிறேன், நீங்கள் செய்வீர்களா...?... 133. நான் இதுவரை கேட்டதிலேயே மிகவும் துக்கமான கதை என்னவென்றால், மிகவும் கவர்ந்து இழுக்கத்தக்க ஒரு வாலிப ஸ்திரீ அவள் ஒரு அருமையான வீட்டில் இருந்து வந்தாள். அவளிடத்தில் கிறிஸ்துவைப்பற்றி பேசினோம். அவளுடைய தகப்பனார் "சங்கை அவர்களே, அவளைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன்", என்றார். சமுதாயத்திற்காக (மற்றவர்களுக்காக) அவ்விதமான வகுப்பின மக்களை அவள் சந்திக்கப் போகிறாள். இதை நினைவில் கொள்ளுங்கள், நீ சமுதாயத்தோடு (உலகத்தோடு) சேரும்போது, "இது முட்டாள் தனம்" என்று அழைக்கிற காரியத்தோடு உன்னையும் இணைத்துக் கொள்ளுகிறாய். அவள் மிகச் சிறந்த கல்வியை பெற்றவளாய் இருந்தாள். அவள் அதிலிருந்து விடுபட்ட உடனே சமுதாயத்தோடு போக ஆரம்பித்தாள். அதன்பின் வேறு மேம்பட்ட வகுப்பின ஆண்களோடு போக ஆரம்பித்தாள். பின்னர் மரணம் அவளை ஏதோ ஒன்றின் மூலம் தாக்கினது. அவளுக்கு மாரடைப்பு வந்தது. அப்போது அவள் எடுத்துக் கொண்ட பயிற்சிகள் அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவள் எங்கேயோ ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டாள். 134. இந்தக் காலை வேளையில் நீங்கள் எந்த வழியில் போய்க் கொண்டிருக்கிறீர்கள்? எதை அடைய கனவு காண்கிறீர்கள்? நீங்கள் எந்தக் கூட்டதாரை சேர்ந்திருந்தாலும் அதைக்குறித்து அக்கரையில்லை. ஆனால், நீங்கள் ஒவ்வொருவரும் இந்நாட்களில் ஒன்றில் நித்தியத்துக்குள் போகப்போகிறீர்கள். கிறிஸ்து இல்லாமல், பரிசுத்த ஆவி இல்லாமல் உங்களுடைய ஆத்துமா இழந்து போனதாய் இருக்கிறது. அதை நினைவு கொள்ளுங்கள். 135. நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதினால் மற்றும் பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொள்வதினால் மாத்திரம் அதை சந்திக்க முடியாது. அவர் உங்களுக்குள் இருப்பதினால் மாத்திரமே அதைச் செய்ய கூடும். அவரே வல்லமையின் தேவன். அதைக் கொண்டு ஜீவியுங்கள். உங்களுக்குள் இருக்கும் அவரே தேவன். ''நீங்கள் தேவர்களானீர்கள்" என்று வேதாகமம் கூறுகிறது. அது சரியே. நீங்கள் எல்லாரும் தேவர்கள் அல்லவா? இயேசுவானவர் இவ்விதமாக... 136. அங்கிருந்த பரிசேயர்கள் "நீ உன்னை தேவனாக ஆக்கிக் கொள்கிறாயே?" என்றார்கள். 137. அதற்கு அவர், "நீங்கள் தேவர்களாய் இருக்கிறீர்கள் என்று உங்களுடைய நியாயப் பிரமாணத்தில் எழுதியிருக் கவில்லையா?" என்றார். தேவன் மோசேயை பார்வோனுக்கு தேவனாக ஆக்கினார். அவர் உங்களையும் ஜனங்களுக்கு தேவனாக்கினார். அது சரியே. நீங்கள் இன்று காலையில் தேவனுடைய எழுதப்பட்ட நிரூபங்களாய் இருக்கிறீர்கள். உங்களுடைய ஜீவியங்கள் தேவனால் உண்டானவைகளாயும் பரிசுத்த ஆவியை சுமந்துக் செல்லுகிறதாயும் இருக்கிறது. இங்கே பாருங்கள் நண்பர்களே, இந்தக் காரியம் உங்களை விட்டு கடந்து போக விடாதேயுங்கள். இது ஏதோ ஒரு கட்டுக்கதையைப் போல கடந்து போக விடாதேயுங்கள். 138. பிதாவே, இந்த காலையில் உம்முடைய தாழ்மையுள்ள பிள்ளைகளாக உம்மிடத்தில் வருகிறோம். நாங்கள் கடைசி வேளையில், முடிவு பெறும் நேரத்தில் ஜீவிக்கிறோம் என்று உணர்கிறோம். எந்த நேரத்திலும் எந்த காரியமும் சம்பவிக்கக்கூடும். இங்கே ஆண்கள், பெண்கள், பையன்கள், பெண்பிள்ளைகள் தேவனற்றவர்களாய் இருக்கின்றனர். பிதாவே நீர் இரக்கமாய் இருக்க வேண்டுமென உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறேன். உம்மை ஏற்றுக் கொண்டு நீர் அவர்களுடைய இருதயத்தில் அருகில் இருக்கிறீர் என்பதை உணராதிருக்கிறவர்களிடம் இரக்கமாய் இருக்க வேண்டுமென்று நான் உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறேன். இந்த உலகத்தில் நாங்கள் அக்கறை கொள்ளுகிற இந்த சிறு காரியங்களெல்லாம் மரித்துக்கொண்டிருக்கிறது என்று நாங்கள் உணர்கிறோம். தேவரீர், உம்முடைய வருகைக்கு முன்னதாக இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமென்றாலும் அதைக்குறித்து அக்கரைக் கொள்ளாமல், வருகிற நாட்களில் உமக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியத்தை இங்கு இக்காலை வேளையில் இருக்கும் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். இப்பொழுது அது மிக சமீபத்தில் இருக்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 139. இன்னும் கொஞ்சம் காலம் கழித்து ஜனங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று முயற்சித்தாலும் அவர்களால் அது கூடாது. அன்றொரு இரவு பிரசங்க பீடத்தண்டையில் சில வாலிப பிள்ளைகள் இரட்சிக்கப்படும்படி முயற்சித்ததை நான் நினைவு கூறுகிறேன். ஆனால் அப்போதோ அவர்கள் அந்த கோட்டை கடந்து போனவர்களாய் இருந்தார்கள். அவர்களுக்கு இனி மீட்பே கிடையாது. அவர்கள் அப்படியே போய்விட்டார்கள். இரட்சிக்கப்பட கூடாமல் போனது. 140. பிதாவே, நீர் ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். பிதாவே, நேரம் இருக்கும்போதே ஒவ்வொருவரும் இன்றைக்கு அதை பெற்றுக் கொள்வார்களாக. இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம் ஆமென். 141. நாம் எழும்பி நிற்கலாம். உங்களில் எத்தனை பேர் அவரை முழு இருதயத்தோடு நேசிக்கிறீர்கள்? இன்னும் சற்று நெருக்கமாக அவரிடத்தில் வரவேண்டுமென்றும், இன்னும் சற்று அதிகமாக அவரை நேசிக்க வேண்டுமென்றும் நீங்கள் விரும்பவில்லையா? நாம் நம்முடைய கரங்களை இந்தக் காலையில் உயர்த்தி ''எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்" என்ற பாடலைப் பாடலாம். நீங்கள் அதை செய்வீர்களா? சகோதரியே அதற்கு இசையை அமையுங்கள். எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன். (உன்னுடைய எல்லா பழக்கங்களையும், உன்னுடைய எல்லா வழிகளையும்) எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன். யாவும் என்னுடைய ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகருக்கே உடையது, எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன். உண்மையாகவே அதை கூறுகிறீர்களா? எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன். எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன். யாவும் என்னுடைய ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகருக்கே உரியது, எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன். 142. ஓ! பிதாவே, இரக்கமாய் இரும். கர்த்தாவே நாங்கள் உம்மை அதிகமாய் நேசிக்கிறோம். இந்நாட்களில் ஒன்றில் எக்காளம் முழங்க போகிறது. அப்போது ஒருக்கால் நான் ஊழியக் களத்தில் வெளியே எங்கேயாவது ஓரிடத்தில் இருக்கக் கூடும். அந்நேரத்தில் தேவனே நான் இந்த சபையைக் குறித்து நினைத்துக் கொண்டிருப்பேன். காற்று அலறும். உலகம் அசைந்து கொண்டிருக்கும். சிலர் "என்ன நடக்கிறது?" என்று கேட்ப்பார்கள். வானங்கள் சிவப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. நியாயத்தீர்ப்பின் வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்போது "ஓ, சகோதரன் கிரஹாம் எங்கே இருக்கிறார்? அவர் வீட்டிற்கு போய்விட்டாரா என்று நினைப்பேன்". அதன்பின் பிதாவே, கொஞ்சம் நேரம் கழித்து நாங்கள் இதுவரை கேட்டிராத அளவு எக்காள சத்தத்தைக் கேட்போம். அந்த தூதன் அந்த எக்காளத்தை முழங்குவார். ஓ தேவனே, அப்போது மரணத்தில் பிரவேசித்தவர்கள் எழும்புவார்கள். அப்போது "உலகத்திற்கு என்ன நேர்ந்தது? எங்களால் அசையாமல் இருக்க முடியவில்லையே? ஏன் அவள் ஊசலாடிக் கொண்டிருக்கிறாள்?" என்று கூக்குரலின் சத்தம் எல்லா இடங்களிலும் கேட்கப்படும். அதன்பின் நாங்கள் அவரை சந்திக்கும்படி ஒன்றாய்ச் சேர்ந்து நடு ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். 143. ஓ! பிதாவே, அந்த நேரத்திற்கு முன்பாக எங்களுக்கு மரணம் வருமானால் அதாவது இந்த பூமியை விட்டு வேறு பிரிவதற்க்குரிய இயற்கையான மரணம் நேர்ந்தால், நாங்கள் தாமே மரண அறைக்குள் தீரமுள்ள விசுவாசத்தோடு, பரிசுத்தஆவியான கிறிஸ்துவின் மேலங்கியை போர்த்தினவர்களாக பிரவேசிப்போமாக. பிதாவே என்றோ ஒருநாள் நாங்கள் அந்த இடத்திற்கு வந்தாக வேண்டும். அந்த வரிசையில் நானும் நடக்க வேண்டியதாய் இருக்கிறது என்று அறிந்திருக்கிறேன். நான் அந்த மரண அறையில் பிரவேசிக்கும் நேரமானது எனக்கு முன்பாக சரியாக அங்கு எங்கேயோ இருக்கிறது. என்னுடைய தீர்ப்பு வாசிக்கப்படுவதை நான் கேட்கையில், நான் ஒரு கோழையாக போகவிரும்பவில்லை. கர்த்தாவே, நீர் போனதுபோல் நான் போக விரும்புகிறேன். என்னுடைய சொந்த மேலங்கியை போர்த்திக் கொண்டு போக முயற்சிக்கிறவனாக அல்ல. ஆனால், ''மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? என கூறி" பவுல் கூறினது போல் பரிசுத்த ஆவியான கிறிஸ்துவின் மேலங்கியை சுற்றிக் கொண்டு மரித்தவர்கள் மத்தியில் நான் அந்த இருளின் மரண அறைக்குள் பிரவேசிக்க விரும்புகிறேன். அப்போது அந்த பிரதான தூதனுடைய சத்தம் முழங்க, அவருடைய சத்தத்தை கேட்டுக் கொண்டிருக்க, மரித்தோரின் மத்தியிலிருந்து மீண்டுமாய் நாங்கள் நேசிக்கிறவர்களை சந்திக்க வெளியே அழைக்கப்படுவோம். 144. ஓ! தேவனே, இதை எங்கள் வாழ்க்கையில் தவற விடுவோமானால் வாழ்க்கை எங்களுக்கு ஒன்றுமே இல்லாததாகும். நாங்கள் தோல்வி அடைந்தவர்களாவோம். ஆனால் எங்களுடைய இருதயத்தில் விலையேறப் பெற்றவராய் இருக்கின்ற அவரை நாங்கள் கண்டறிந்தோமானால் அப்பொழுது நாங்கள் தேவனுடைய எல்லா நோக்கத்தையும் கண்டறிந்தவர்களாய் இருப்போம். 145. ஓ! இந்த காலை வேளையில் நாங்கள் அவரை எவ்வளவாய் - நேசிக்கிறோம். தேவரீர் இந்த காலையில் ஒவ்வொரு கிறிஸ்தவனும் இந்த தரிசனத்தை துரிதமாய் காண்பார்களாக. நேரமானது போய்க் கொண்டிருக்கிறது. காலதாமதமாகிறது. அவர்கள் தாமே அந்த தரிசனத்தைக் கண்டு இன்றைக்கு ஜீவனை பிடித்துக்கொண்டு என்றென்றைக்குமாய் ஜீவிக்கும்படி ஜெபிக்கிறேன். இதை நாங்கள் இயேசுவின் நாமத்திலே கேட்கிறோம். ஆமென். 146. நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறீர்களா? அப்படியே திரும்பி நீங்கள் இன்னொருவருடன் கரங்களை குலுக்கி, "தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கிறிஸ்து உங்களுடன் இருப்பாராக" என்று கூறுங்கள். கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என்று கூறுவதற்கு பதிலாக ''கிறிஸ்து உங்களோடு இருப்பாராக" என்று கூறுங்கள். இப்பொழுது போய்விடாதீர்கள் அப்படியே திரும்பி ''கிறிஸ்து உங்களோடு இருப்பாராக" என்று கூறுங்கள். எல்லோருமாக சற்று நிமிடம், யாவும் என்னுடைய ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகருக்கே உரியது எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன். 147. நேரம் பதினொன்று ஆனபோது நான் பன்னிரெண்டுக்கும் மேல் ஆகிவிட்டது என்று எண்ணினேன் பன்னிரெண்டு இருபது ஆயிற்று என்று நினைத்தேன். (ஒரு சகோதரி, "இன்னும் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளலாம்" என்கின்றார்) என்ன? ஆமென். 148. எல்லாரும் தேவனை நேசிக்கிறீர்களா? ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுங்கள். இன்னும் சற்று அதிகமாகச் சொல்லலாமே. இது வெறும் மூன்று அல்லது நான்கு சாட்சியின் வார்த்தைகள் தானே. இதற்கு அதிகமாக இல்லையே வெறும் "நான் இயேசுவை நேசிக்கிறேன்" என்பது மாத்திரமே ஆகவே அதை அப்படியே சொல்லிக் கொண்டிருங்கள். (யாரோ ஒருவர், "நான் இயேசுவை நேசிக்கிறேன்" என்று சொல்லுகிறார்). அருமையானது. இன்னும் யாராவது சொல்வீர்களா. (அநேகர் "நான் இயேசுவை நேசிக்கிறேன்" என்கின்றனர்) நான் அவரை நேசிக்கிறேன். ஓ நான் அவரை நேசிக்கிறேன். ஓ இயேசுவே.... இயேசுவே இரட்சகரே என்னை நடத்திச் செல்வீராக: வாழ்க்கையின் புயல்களுக்கு மேலாக, அறிய முடியாத அலைகள் என் மீது புரள்வதற்கு முன்... 57-0922E - எபிரெயர், ஏழாம் அதிகாரம் 2 295 பரிசுத்தவான்களின் விடாமுயற்சி என்பதன்பேரில் நான் போதித்துள்ளேன் என்பதை நான் அறிவேன். நான் இயேசு கிறிஸ்துவின் உயரிய தெய்வீகத் தன்மை என்பதன் பேரில் போதித்துள்ளேன். நான் விசுவாசியின் பாதுகாப்பு, முன்னறிதல், முன்குறித்தல் மற்றும் அதைக் குறித்த அநேகக் காரியங்களின் பேரில் போதித்துள்ளேன். என்னுடைய சபையில் பிரமாணத்தைக் கடைபிடிக்கிறவர்கள் அநேகர் உள்ளனர் என்பதை நான் அறிவேன், அது முற்றிலும் சரியாயிருக்கலாம். முற்றிலுமாக. ஆனால், இப்பொழுது, அந்தக் காரியங்களில், நானும் கூட ஒரு பிரமாணக்காரன், நான் ஒரு கால்வினிஸ்டு. நான் அப்படியே வேதாகமத்தை விசுவாசிக்கிறேன். அவ்வளவுதான். THE DEITY OF JESUS CHRIST 60 இயேசு கிறிஸ்துவின் தேவத்துவம் 59